
உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன் உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பானா?.. இந்த பழமொழிக்கு பலர் பலவிதமான அர்த்தங்களை கூறுவார்கள். ஆனால் ஒருசிலருக்கு மட்டும் தான் உண்மையான விளக்கம் தெரியும். இந்த பதிவில் இதற்கு உண்மையான அர்த்தத்தை பார்ப்போம்.
உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன் உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பானா?..
உடையார்பாளையம் என்பது சத்திரியர்கள் அதிகம் வசிக்கும் வீரம் நிறைந்த பகுதியாக இருந்தது. உள்ளூரில் வீரச்செயல் புரியாதவன் உடையார்பாளையம் சென்று அங்கு உள்ளவர்களிடம் தனது வீரத்தை நிரூபிப்பானா என்பதே இந்த பழமொழியின் விளக்கம்.
‘நான் அதைச் செய்வேன்; இதைச் செய்வேன்’ என வாயால் வம்பளப்பவன், ஒரு போதும் ஒரு காரியமும் செய்ய மாட்டான்; அவனை நம்பி பலனில்லை.