கேரளாவை போல தமிழ்நாட்டிற்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம்..!! தமிழ்நாடு மக்களே உஷார்..!!
கேரளாவில் கடந்த சில நாட்களாகவே இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் அங்குள்ள சில பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது.கேரளாவில் உள்ள வயநாடு பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டு அங்கு வசித்து வந்த 200 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது .மேலும் மீட்புப்படையினர் இன்னும் அப்பகுதிகளில் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மாநிலத்திற்கு நேற்று ரெட் அலர்ட் விடுத்து கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது இந்திய வானிலை மையம் இன்று கேரளா மற்றும் தமிழ்நாட்டிற்கும் மஞ்சள் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் தமிழ்நாடு ,கேரளா ஆகிய பகுதிகளில் இன்று ஒருசில இடங்களில் 7 – 11செ.மீ மழை பதிவாகி உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.