உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டம் புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற ஆன்மீகவாதி நடத்திய ஆன்மீக சொற்பொழிவு நிகழ்வின் பொழுது கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 134 பேர் பலியாகியுள்ளனர். அவர்களின் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் ரூ. 4 லட்சம் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்திருந்தார்.
இதற்கிடையே ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ரஷ்ய அதிபர் புதின், ஜனாதிபதி திரௌபதி முர்ம, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் செய்தி அனுப்பியிருந்தனர். இந்த நிலையில் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷாடா நாட்டு வெளியுறவு அமைச்சக இணையதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ‘‘ஹத்ராஸ் சம்பவம் அறிந்து மிகவும் நான் வருத்தம் அடைந்துள்ளேன். உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்கின்றேன்”, என தெரிவித்துள்ளார்.