உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் சத்சங்க நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நிவாரணம் அறிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக உயர்மட்டக்குழு விசாரணை செய்ய யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவத்தில் இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.