
- திருப்பூர் | தீயில் கொழுந்து விட்டு எரிந்த பஞ்சு மூட்டைகள்! காரணம் குறித்து விசாரணை!
ஊத்துக்குளி அருகே பஞ்சு மூட்டைகளை ஏற்றி சென்ற லாரியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 15 லட்சம் மதிப்புடைய பஞ்சு மூட்டைகள் எரிந்து சாம்பலாகின.திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி செங்கப்பள்ளியை நோக்கி இன்று காலை, ஹரியானாவில் இருந்து பஞ்சு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று வந்தது.
லாரி ஊத்துக்குளி-செங்கப்பள்ளி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென லாரியில் இருந்து கரும்புகை வெளியேறியது.
இதனை பார்த்த லாரி ஓட்டுநர் உடனே கீழே இறங்கி வருவதற்குள் லாரியில் இருந்த பஞ்சு முட்டைகள் அனைத்தும் தீப்பற்றி எரியத்தொடங்கியது. அதிலும் பஞ்சுகள் என்பதால் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இந்த விபத்து குறித்து ஊத்துக்குளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இருப்பினும் ரூ.15 லட்சம் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் தீயில் எரிந்து சாம்பலாகின. மேலும் லாரியில் ஏற்பட்ட தீ விபத்துக்கு காரணம் என்ன? என்று ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.