ஊருக்குள் புகுந்து வீடுகளை சூறையாடிய யானை கூட்டம் : மக்கள் அச்சம்..!!

வால்பாறையில் ஊருக்குள் புகுந்த யானை கூட்டம் வீடுகளை சூறையாடினர்…

கோவை மாவட்டம் வால்பாறையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது இதை பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் கூட்டமாகவும் தனியாகவும் சுற்றித் திரிகின்றன இவற்றை கட்டுப்படுத்த தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளில் நவீன கருவிகளை பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர் இதனால் காட்டு யானைகள் அட்டகாசம் குறைந்து வருகிறது, ஆனால் இந்த கருவிகளில் பொருத்தப்படாத சில எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் குட்டிகளுடன் ஒன்பது காட்டி யானைகள் கொண்ட கூட்டம் கவர்கள் எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் நுழைந்தது அங்கு கருவி இதுவும் பொருத்தப்படாததால் காட்டு யானைகள் நுழைந்து தொழிலாளர்களுக்கும் வனத்துறையினருக்கும் உடனடியாக தெரியவில்லை, இதற்கிடையில் அங்குள்ள மாரியம்மன் கோவில் கதவை காட்டு யானைகள் உடைத்தன மேலும் ஆஷா பணியாளர் கலைவாணி என்பவர் வீட்டின் கதவு ஜன்னலை உடைத்தனர் அத்துடன் துதிக்கையை உள்ளே விட்டு உணவுப் பொருள் ஏதாவது கிடைக்குமா என தேடின அப்போது பொருட்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன இந்த சத்தம் கேட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இந்த கலைவாணி எழுந்து வந்து பார்த்தார், அப்போது காட்டு யானைகள் நிற்பதை கண்டு கூற்று விட்டார் உடனே அருகில் வசிக்கும் தொழிலாளர்கள் அங்கு கண்காணிப்பு பணியில் இருந்த வனத்துறையினர் வேட்டை தடுப்பு காவலர்கள் விரைந்து வந்தனர் அவர்கள் காட்டியணைகளை அங்கிருந்து விரட்டினர் அப்போது அதே பகுதிகளில் உள்ள எட்டு வீடுகளில் கதவு ஜன்னலை உடைத்தன அதன் பிறகு அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்று தொடர்ந்து அங்கேயே முகாமிட்டு வருகின்றன அவை மீண்டும் குடியிருப்பு பகுதியில் நுழையாமல் தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்..!!

Read Previous

சபரிமலையில் 18 படிகள் உணர்த்தும் தத்துவம் மற்றும் அதனின் மகத்துவத்தை பற்றி அவசியம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்..!!

Read Next

தமிழக முழுவதும் நாளை கிராம சபை கூட்டம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular