நமது உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம். ஏனெனில் இப்போது இருக்கும் நவீன காலத்தில் நமது உடலுக்கு ஊட்டச்சத்து அளிக்கின்ற பொருட்களை நாம் கம்மியாக தான் சாப்பிட்டு வருகிறோம். அப்படி இன்று ஊற வைத்த உலர் திராட்சையை சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று இந்த பதிவில் காண்போம்.
ஊற வைத்த உலர் திராட்சையை சாப்பிடுவதனால் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளிலிருந்து விடுபட மிகவும் உதவுகிறது. மேலும் அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சல் பிரச்சனையை சரிசெய்யவும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. அதுமட்டுமில்லாமல் உடல் எடையை குறைக்கவும் கல்லீரலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றி கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இந்த ஊறவைத்த உலர் திராட்சை மிகவும் உதவுகிறது.
நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகையால் இத்தனை மருத்துவ குணங்களை உள்ளடக்கிய ஊறவைத்த உலர் திராட்சையை சாப்பிட்டு நமது உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தையும் ஊட்டச்சத்தையும் சேர்த்து வைப்போம்.




