எகிப்து அதிபர் பங்கேற்பு…! வருகிற 74-வது குடியரசு தின விழாவில்…!

இந்தியாவின் 74வது குடியரசு தின அணிவகுப்பில், எகிப்து அதிபர் தலைமை விருந்தினராக கலந்து கொள்ளப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது…!

வரும் ஜனவரி-26 ஆம் தேதி நடைபெறும் இந்தியாவின் பிரமாண்டமான குடியரசு தின அணிவகுப்பின், தலைமை விருந்தினராக எகிப்திய ஜனாதிபதி அப்தெல்-பத்தா அல்-சிசி கலந்து கொள்கிறார். இந்த குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக எகிப்து அதிபர், ஜன-24ஆம் தேதி புதுடெல்லிக்கு வரவுள்ளார் என தகவல் வெளியாகிவுள்ளது.

மேலும் இந்தியா-எகிப்து உறவை வலுப்படுத்த பாதுகாப்பு மற்றும்  மற்ற முக்கிய கூட்டங்களில் அவர் கலந்து கொள்வர் என்றும் கூறப்படுகிறது. ஜனவரி 26 அன்று நடைபெறும் இந்தியாவின் குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொள்ளும் முதல் எகிப்தியர் மற்றும் ஐந்தாவது மேற்கு ஆசியத் தலைவர் அப்தெல்-பத்தா அல்-சிசி, என்பது முக்கியத்துவமானது.

அவரை இந்நிகழ்வுக்கு அழைப்பது எகிப்துடனான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் இந்தியாவின் முக்கிய இருதரப்பு நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. மேலும் ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தையில் நுழைய  இந்தியாவிற்கு இது ஒரு வாய்ப்பாக கருதப்படுகிறது.

Read Previous

தை அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்..!!

Read Next

தமிழக அரசு அனுமதி…! ரூ.641 கோடி செலவில் குப்பைகளை அகற்ற புதிய திட்டம்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular