ஒன்றை இழந்து தான் மற்றொன்றை பெற முடியும் தன்னுடைய இளம் பருவத்தை வறுமையில் கழித்தவர்கள் வசதியாக வாழ ஏங்குகிறார்கள்…
எந்த பணம் அவர்களை துன்பத்திலும் சோதனையிலும் தவிக்க விட்டதோ வேடிக்கை பார்த்ததோ அந்த பணத்தை திகட்டும் அளவு சம்பாதிக்கும் ஆசை அவர்களுக்கு வந்து விடுகிறது தங்கள் தூக்கத்தை இழந்து ஓய்வை இழந்து பல இனிய அனுபவங்களை இழந்து பணத்தை குவிக்கிறார்கள். எண்ணம் சக்தி வாய்ந்தது ஆயுதத்தை விட மதிப்பு மிக்கது. எண்ணத்திலிருந்து செயலுக்கான தூண்டுதலை நாம் பெறுகிறோம் நல்ல எண்ணங்கள் நல்ல விளைவுகளையும் தீய எண்ணங்கள் தீய விளைவுகளையும் கொண்டிருக்கும். எண்ணமே வாழ்க்கையை வடிவமைக்கிறது பணத்தின் மீது விருப்பம் இருக்கலாம் ஆசை இருக்கலாம் ஆனால் அதுவே வெறியாகி விடக்கூடாது. நீங்கள் எதை வேண்டுமானாலும் அடுத்தவர் தலையில் கட்டிவிட முடியும் ஆனால் உங்கள் கவலையை அவர்கள் மீது சுமத்த முடியாது. மனிதர்கள் இரண்டு வகை எதற்குமே கவலைப்படாதவர்கள் எதற்கு எடுத்தாலும் கவலைப்படக்கூடியவர்கள்..
நேற்று வரை தொலைந்து போன பணத்துக்காக கவலைப்படுவதும் அடுத்து தொலைத்ததை விட பணக்கார உறவினர் மூலமாக அதிக பணம் ஈட்டி விட முடியுமா என்ற எதிர்பார்ப்பதும் எப்படி நியாயமான கவலையாகும். வாங்கிய கடனை எப்படி கொடுப்பது கொடுத்த கடன் திரும்ப வருமா பைக்கில் சென்ற கணவன் பத்திரமாக வீடு திரும்புவானா இப்படி கணக்கில்லாத கவலைகளும் சிலருக்கு எட்டிப் பார்க்கும். எதுவுமே இல்லாத இருப்பதை விட ஏதாவது ஒன்றைப் பெற்றிருப்பது மேலானது என்பார்கள். நம்பிக்கை என்பது விரும்பிய விதத்தில் எண்ணமிடுவது அல்ல ஒன்றை திடமாக நம்புவது ஒரு எண்ணத்தை ஒரு திட்டத்தை ஒரு செயலால் உங்களால் உருவாக்க முடியும் பின்னணியில் வலுவான நம்பிக்கை இருந்தால் எதுவும் சாத்தியம். ஒரு விடையளவு நம்பிக்கை இருந்தால் போதும் சிறிய விதைதான் ஆனால் அது விதைக்கப்பட்டு விடுகிறபோது அது செல்வத்தையும் ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியும் கொண்டு வந்து விடுகிறது..!!