மக்கள் எங்கு சென்றாலும் இலவச Wifi யை பயன்படுத்தி வருவது வழக்கமாக இருக்கிறது. என்னதான் 5ஜி நெட்வொர்க் இந்தியாவில் முக்கால்வாசி இடத்தில் இருந்தாலும் 4g பயன்படுத்தும் மக்கள் இந்த இலவச Wifi யை பயன்படுத்தி தான் வருகிறார்கள்.
ஆனால் இப்படி உபயோகிப்பது ஆபத்தானது என்று மத்திய அரசின் சிஇஆர்டி அமைப்பு எச்சரித்துள்ளது. மேலும் பாதுகாப்பற்ற இணைப்புகளின் மூலம் எளிதில் உங்கள் மொபைல் போனை ஹேக் செய்து விடுவார்கள் எனவும் கூறியுள்ளது. இதனால் உங்களின் டேட்டா திருடப்படும்.
மேலும் நிதி இழப்பு போன்ற பிரச்சனைகளையும் நீங்கள் சந்திக்க நேரிடும் என்று தெரிவித்துள்ளது. அது மட்டும் இல்லாமல் அரசின் அங்கீகரிக்கப்பட்ட WiFi யினை பயன்படுத்துவது எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது. மத்த இடத்தில் இதை உபயோகிக்காமல் இருப்பதே உங்களுக்கு நல்லதாகும்.




