எச்சரிக்கை: ஆப் மூலம் கடன் வாங்குகிறீர்களா?.. இதை முதலில் படியுங்கள்..!!
கடன் செயலியில் பதிவு செய்தவுடன், நமது மொபைலில் இருக்கும் தொலைபேசி எண்கள் மற்றும் புகைப்படங்கள் அவர்கள் வசம் சென்றுவிடும். பணத்தை செலுத்த தாமதமானால், முதலில் அவர்களது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு போன் செய்து குறிப்பிட்ட நபர் கடனை செலுத்தவில்லை என்று கூறுகின்றனர். அடுத்த கட்டமாக கடன் வாங்குபவரின் புகைப்படங்கள் ஆபாசமாக மாற்றப்பட்டு, அவர்களின் நெருங்கியவர்களுக்கு வாட்ஸ்அப் செய்யப்படுகிறது.