விரதம் இருப்பது ஆன்மீகத்தை தாண்டி உடல் நல ரீதியாக நல்லது என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுவது உண்டு அப்படி இருக்கும் பட்சத்தில் விரதம் இருப்பது சிலருக்கு ஆபத்தை நீடும் என்று கூறுகின்றனர்..
விரதம் இருப்பது ஆன்மீகத்தை தாண்டி அறிவியல் ரீதியாக நல்லது என்றாலும் விரதம் எல்லோரும் இருக்க கூடாது, குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் மற்றும் நாட்ப்பட்டு நோய்வாய் பட்டவர்கள் மற்றும் சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் விரதம் இருப்பது கூடவே கூடாது, மேலும் குழந்தைகள் கர்ப்பிணி, பெண்கள், முதியோர்கள் அனைவரும் விரதம் இருப்பது தவிர்த்துக் கொள்ள வேண்டும், அப்படி இருப்பதினால் தேவையில்லாத உடல் சோர்வு, மயக்கம் ஏற்படும், வேறு ஏதேனும் உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு மருந்து உட்கொள்பவர்கள் விரதம் இருப்பது கூடாது இதனால் தேவையில்லாத பின்விளைவுகள் பார்க்க நேரிடும், முடிந்தவரை விரதம் இருக்க நினைப்பவர்கள் உடல் ஆரோக்கியமாக இருப்பவர்கள் மட்டும் இதனை கடைபிடிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றன, மேலும் விரதம் இருப்பவர்கள் மாதத்திற்கு ஒருமுறை இருப்பதும் கூட நல்லது தான் ஆனால் அதையே வாரத்திற்கு இருமுறை என விரதமிருப்பது உடலுக்கு ஆரோக்கியத்திற்கான கேடு விளைவிக்கும்..!!