எச்சில் ஊறும் சாட் மசாலாவை வீட்டில் செய்து அசத்துங்க பத்து நிமிடம் போதும்..!!

சிறியவர் முதல் பெரியவர் வரை பேவரட்டாக இருக்கும் சாட் மசாலாவை வீட்டில் சுலபமாக எப்படி செய்யலாம் என்பதை இந்த தொகுப்பின் மூலம் தெரிந்து கொள்வோம்…

மிளகாய்த்தூள், மல்லித்தூள் வரிசையில் சாட் மசாலாவும் அனைவரின் சமையலறையில் இன்றியமையாத ஒரு பொடியாக மாறிவிட்டது சாலட் தொடங்கி பொரியல் வரை ஒரு ஸ்பூன் சாட் மசாலாவை அதன் மீது தூவி சாப்பிட்டால் அதன் சுவையே தனிதான் கடையில் சமோசா பஜ்ஜி என எது சாப்பிட்டாலும் கொஞ்சம் சாட் மசாலா போட்டு தாங்க என சொல்ற அளவிற்கு அனைவரின் ஃபேவரட்டாக மாறி உள்ளது இப்படியான சாட் மசாலாவை கடையில் வாங்காமல் வீட்டிலேயே தயார் செய்து கொள்ளலாம், சாட் மசாலா செய்வதற்கு தேவையான பொருட்கள் சீரகம் கால் கப், மிளகு அரை டேபிள், ஸ்பூன் புதினா ஐந்து முதல் ஏழு இலைகள், மிளகாய் தூள் ஒரு டேபிள்ஸ்பூன், அம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள்) 1 முதல் 2 டேபிள் ஸ்பூன், பெருங்காயத்தூள் அரை டேபிள்ஸ்பூன், சுக்கு பொடி அரை டேபிள் ஸ்பூன், கல் உப்பு ஒரு டேபிள் ஸ்பூன், கருப்பு உப்பு ஒரு டேபிள் ஸ்பூன்,
சாட் மசாலா செய்யும் முறை : அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சூடானதும் சீரகம் சேர்த்து மனம் வரும் வரை வறுத்து ஒரு தட்டில் மாற்றி வைக்கவும் பின்னர் மிளகு புதினா இலை மற்றும் ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து தட்டிற்கு மாற்றவும் இப்போது அடுப்பை அணைத்து கடாயில் இருக்கும் சூட்டில் கல் உப்பு கருப்பு உப்பு சுக்குப்பொடி பெருங்காயம் மாங்காய், மிளகு, தூள் சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும் இப்போது அனைத்து பொருட்களும் நன்றாக அறியாதும் காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்தால் சாட் மசாலா தயார் இனி வீட்டில் பஜ்ஜி பக்கோடா சிப்ஸ் என எந்த வகையான ஸ்னாக்ஸுக்கும் சாட் மசாலா தூவி சாப்பிடலாம்..!!

Read Previous

வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் உண்டாகும் நன்மைகள்..!!

Read Next

பால் திரியாமல் கருப்பட்டி டீ போடுவது எப்படி என்று உங்களுக்கு தெரிய வேண்டுமா இதோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular