
பொதுவாக இஞ்சி இடுப்பழகி என்று சொல்வார்கள் காரணம் இஞ்சி இடுப்பை சுற்றியுள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது இஞ்சியை உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் நீங்கள் நினைத்த மாதிரி எடையை குறைக்க முடியும்..
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் துருவிய இஞ்சியை போட்டு காலையில் எழுந்ததும் குடியுங்கள் இது உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. சூடான நீரில் இஞ்சி துண்டுகளை போட்டு இஞ்சி தேனி தயாரிங்கள் சுவைக்காக லெமன் மற்றும் தேன் சேர்த்துக் கொள்ளுங்கள் உடலில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது. வாழைப்பழம் கீரை மற்றும் தயிர் போன்ற பழங்களுடன் இஞ்சியை சேர்த்து கலந்து ஸ்மூத்தி தயாரித்து குடித்து வரலாம் இது உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. இஞ்சி ஷாட்ஸ் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது இதனுடன் லெமன் சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம். நீங்கள் தினசரி தயாரிக்கும் குழம்பு சூப்புகள் போன்றவற்றில் இஞ்சியை சேர்த்து வரலாம் இப்படி உணவில் இஞ்சியை சேர்த்து வந்தால் கூடுதல் ஆரோக்கியத்தை பெற முடியும். இஞ்சி சாறை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர நீங்கள் எடை இழப்பு நன்மைகளை பெறலாம் இது செரிமானத்தை ஆற்ற உதவுகிறது. இஞ்சி மற்றும் ஆப்பிள் சிடார் வினிகர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள் அதனுடன் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து குடித்து வாருங்கள் இது ஒரு டிடாக்ஸ் பானமாக செயல்படுகிறது. கிரீன் டீயில் இஞ்சியை சேர்த்து கொதிக்கவிட்டு குடித்து வரலாம் இந்த பானமும் உங்கள் வளர்ச்சியை மாற்றத்தை தூண்டி உடல் எடையை குறைக்க பயன்படுகிறது..!!