எடை குறைய.. ரத்த அழுத்தம் குறைய இதை மட்டும் சாப்பிடுங்க போதும்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!
எடையை குறைக்கவும் ரத்த அழுத்தம் குறைக்கவும் பழைய சப்பாத்தியை சாப்பிட்டால் போதும். என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா..?? ஆம் அதைப்பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
பழைய சப்பாத்தியில் தான் அதிக அளவு நார்ச்சத்து இருக்கிறது. இந்த நார்ச்சத்து எளிதாக ஜீரணிப்பதற்கும் குடலுக்கு மிகவும் நல்லது. உடனடியாக செய்த சப்பாத்தியில் இருப்பதைவிட பழைய சப்பாத்திகள் தான் நார்ச்சத்து அதிகமாக இருக்கும். நேரம் ஆக ஆக சப்பாத்தியில் இருக்கும் ஸ்டார்ச் உடைந்து நார்ச்சத்தாக மாறிவிடும். சப்பாத்தியை செய்த உடனே சாப்பிட்டால் அதில் அதிக அளவில் கலோரி இருக்குமாம். நேரம் ஆக ஆக சப்பாத்திகள் இருக்கும் ஸ்டார்ச் உடைந்து கலோரியை குறைத்து விடும் என்று கூறுகின்றனர். உடல் எடையை குறைக்க நினைப்பவர்களும் இந்த பழைய சப்பாத்தியை சாப்பிடுவதன் மூலம் நல்ல பலனை பெற முடியுமாம். பழைய சப்பாத்தியை குளிர்ந்த பாலில் ஊற வைத்து பத்து நிமிடங்கள் கழித்து சாப்பிடுவது உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மிகவும் உதவும்.




