எண்ணற்ற மருத்துவ பலன்கள் அடங்கிய மக்காச்சோளம்..!! தினமும் கூட சாப்பிடலாம்..!! தெரிஞ்சுக்கோங்க..!!

மக்காச்சோளம் உலகம் முழுவதும் பயிரிடப்படும் ஒரு உணவுத் தானியமாகும். உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் ஒரே உணவு பொருள் இதுதான். மக்காச்சோளத் தாவரங்கள் 7 மீட்டர் (23 அடி) உயரம் வரை வளர்கின்றன. வணிக அடிப்படையில் பயிராகும் மக்காச்சோளத் தாவரங்கள் 2.5 மீட்டர் (8 அடி) வரை உயரமாக வளர்கின்றன. இனிப்பு மக்காச்சோள வகை பிற மக்காச்சோள வகைகளை விட குட்டையானது.

மக்காச்சோளம் வரலாறு

சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு பிரேசிலின் தெற்கு பகுதியில் வாழ்ந்த அமெரிக்க பூர்வகுடிகள் முதன் முதலாக மக்காச்சோளத்தைப் பயிரிட்டனர். 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஐரோப்பியர்களுக்கு அமெரிக்காவுடன் ஏற்பட்ட தொடர்புகளைத் தொடர்ந்து இது உலகின் பல பகுதிகளுக்கும் பரவியது. உலகின் சோள உற்பத்தியில் சரிபாதியளவு தென் அமெரிக்கா, மற்றும் வட அமெரிக்காவில் தான் நடைபெறுகிறது. மேலும் இந்தியா, சீனா, பிரேசில், பிரான்ஸ், இந்தோனேசியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிலும் அதிகம் பயிரிடப்படுகிறது.

மக்காச்சோள பயன்பாடுகள்

மக்காச்சோளத்தை பெரும்பாலும் சோளப்பொரி ( Popcorn) செய்யவே பயன்படுத்துகின்றனர். ஒரு சில மக்காச்சோள வகைகளி்ல் இருந்து எத்தனால், கால்நடைத் தீவனங்கள், சோளமாவு (Corn Starch) சோளச் சாறு ( corn syrup), மற்றும் சோள எண்ணெய் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன.

மக்காச்சோளம் வகைகள்

பல வகையான மக்காச்சோள பயிர்கள் பயிரிடபடுகின்றன. அவை குழி மக்காச்சோளம், சோளப்பொறி மக்காச்சோளம், மாவு மக்காச்சோளம், இனிப்பு மக்காச்சோளம், கடின மக்காச்சோளம், மெழுகு மக்காச்சோளம், அமைலோ மக்காச்சோளம், உறைய மக்காச்சோளம், வரி மக்காச்சோளம் உள்ளிட்ட மக்காச்சோள வகைகள் உள்ளன.

மக்காச்சோளம் மருத்துவ பயன்கள்

உடல் ஆரோக்கியம் மேம்படும்

மக்காச்சோளத்தில் சரியான அளவில் கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகளை கொண்டது. மக்காச்சோளத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கும். மேலும் பார்வைக்கோளாறு ஏற்படாமல் தடுத்து கண்களை பாதுகாக்கும் தன்மை கொண்டது.

இதய நலன் பாதுகாக்கப்படும்

சோளம் குறைந்த அளவு கொழுப்பினை கொண்டது. இது இதய ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக இருப்பதோடு, இதயம் சம்பந்தபட்ட நோய்களையும் வராமல் உதவி புரிகிறது.

மலச்சிக்கலை தீர்க்கும்

மக்காசோளம் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான ஆபத்தை குறைக்கிறது. கார்போஹைட்ரேட் மற்றும் புரதம் மக்காசோளத்தில் நிறைந்து காணப்படுவதால் மனஅழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது. இது அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கொழுப்பு சத்துக்களை கொண்டுள்ளதால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை தவிர்த்து, உணவு செரிமானமாக உதவி புரிகிறது.

மூலநோய் ஏற்படாமல் தடுக்கும்

சோளத்தில் அதிக அளவு நார்சத்து நிறைந்துள்ளது. சோளத்தை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிட்டால் நார்ச்சத்து முழுமையான அளவு நமது உடலுக்கு கிடைக்கும். இந்த நார்ச்சத்து மூல நோய் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சோளத்தில் இருக்கும் இந்த நார்ச்சத்து குடல், வயிறு புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

ரத்த ஓட்டம் சீராக இருக்கும்

சோளத்தில் இருக்கும் ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இதனால் ரத்த நாளங்கள், நரம்புகள் மற்றும் இதயத்திற்கு செல்லக்கூடிய நரம்புகள் போன்றவற்றில் கொழுப்புகள் படிந்து விடாமல் தடுத்து, சீரான ரத்த ஓட்டம் செல்வதை உறுதி செய்கிறது.

ரத்த சோகை நீங்கும்

பரம்பரை காரணம் மட்டுமல்லாமல் உடலில் வைட்டமின் மற்றும் தாதுக்கள் குறைபாட்டாலும் ரத்தசோகை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகிறது. இரும்புச்சத்து அதிகம் உள்ள சோளத்தை பச்சையாகவோ அல்லது வேறு முறைகளிலோ சாப்பிட்டு வந்தால் உடலில் சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தி அதிகரித்து, இரத்த சோகை குறைபாடு விரைவில் நீங்கும்.

உடல் எடை கூடும்

 

சோளத்தில் கலோரி சத்துக்கள் அதிகம் உள்ளது 100 கிராம் சோளத்தில் 365 கலோரி இருக்கின்றது. சோளத்தில் இருக்கின்ற மஞ்சள் மற்றும் வெள்ளை நிறப் பொருட்கள் விரைவில் உடல் எடை கூடுவதற்கு உதவுகிறது. சராசரி உடல் எடையை விட குறைவாக இருப்பவர்கள் சோளத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.

 

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த சோளத்தை சாப்பிட்டு ஆரோக்கிய வாழ்வை வாழ்வோம்.

Read Previous

பச்சரிசி மாவில் கோலம் போடுவதன் உண்மையான காரணம் என்ன தெரியுமா..?? கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..!!

Read Next

காதுக்குள் பூச்சி நுழைந்து விட்டால் இதை மட்டும் செய்தால் போதும்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular