தீபாவளி நாட்களில் எண்ணெயில் குளிப்பது வழக்கம் அதுவும் புதுமண தம்பதிகளாக இருக்கும் தல தீபாவளி என்ற எண்ணை தேய்த்து குளிப்பது வழக்கம் ஆனால் என்னை தேய்த்து குளிப்பதில் உள்ள நன்மைகளைப் பற்றி நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்…
எண்ணெய் குளியல் தேரையர் தைலவர்க்க சுருக்கம், என்னை குளியல் சித்த மருத்துவத்தில் நோயை அணுகாமல் நோயை தீர்க்கும் இன்றி அமையாத முறையாகும் பல சித்தர்கள் இதை குறிப்பிட்டு இருந்தாலும் தேரையர் தன்னுடைய தைலவர்க்க சுருக்கத்தில் விரிவாக விளக்கியுள்ளார், சூரிய உதயத்தின் முன்னே அதிகாலையில் நல்லெண்ணெய் அவரவர் தேகத்திற்கு ஏற்ப தடவி சிறிது நேரம் கழித்து வெந்நீரில் குளிக்க வேண்டும் ஆண்கள் புதன் சனி பெண்கள் செவ்வாய் வெள்ளி ஆகிய தினங்களில் வாரம் இருமுறை எண்ணை தேய்த்து குளித்து வர வேண்டும் செவியல் மூன்று துளி தலை பிணிப் போகும், மேலும் எண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் உடல் குளிர்ச்சி அடையும், எலும்புகள் பலப்படும், உடல் புத்துணர்வாக இருக்கும், பார்வை தெளிவாக கிடைக்கும் மேலும் தலை முதல் பாதம் வரை சூடு தணிந்து ஆரோக்கியமாக இருக்கும், மேலும் நமக்கு பிடித்த தோஷங்கள் நீங்க எண்ணெய் குளியலை மேற்கொள்வதும் பழக்கம் இதன் மூலம் தோஷங்கள் நீங்கி இனிவரும் காலங்கள் சிறப்பாக அமையும் என்றும் கூறுகின்றனர்..!!




