“எதற்காக பேட்டி கொடுக்க வேண்டும்..?” கோபத்தில் பேட்டியளித்த நடிகை கனகா..!!

1989 ஆம் ஆண்டு “கரகாட்டக்காரன்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கனகா. இவர் மறைந்த பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் ஆவார். தொடர்ந்து மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை கனகா ரஜினி, பிரபு,.. கார்த்திக் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

“அதிசய பிறவி”, “கும்பக்கரை தங்கையா”, “தாலாட்டு கேக்குதம்மா”,  “கோயில் காளை”, “கிளிப்பேச்சு கேட்கவா”, “பெரிய குடும்பம்”, “சிம்ம ராசி” உட்பட பல்வேறு படங்களில் நடித்த கனகா நடித்துள்ளார்.

இவர் 1999 ஆம் ஆண்டு “விரலுக்கேத்த வீக்கம்” படத்தில் தான் கடைசியாக நடித்திருந்தார், இதனை தொடர்ந்து மலையாளத்தில் 2000 ஆண்டு “நரசிம்மம்” என்கின்ற படத்தில் கடைசியாக நடித்துள்ளார். கடந்த 23 வருடங்களாக காணாமல் போயிருந்த நடிகை கனகா தனியாக ஒரு வீட்டில் வசித்து வருகிறார் என்றும், அவர் இறந்துவிட்டார் என்றும் பல்வேறு வதந்திகள் பரவியது.

இந்நிலையில் ஒரு பேட்டியில் கனகா “நான் இப்போதும் அதே வீட்டில் தனிமையில் தான் உள்ளேன். யாருடனும் பேசக்கூடாது என்று நினைக்கவில்லை. ஆனால் நாம் என்ன பிசியாக இருக்கிறோம் எதற்காக பேட்டி கொடுக்க வேண்டும் என்று என் மனசாட்சி கேட்டதால் தான் ஒதுங்கி இருக்கிறேன்”, என்று கூறியுள்ளார்.

Read Previous

அகதிகளுடன் கடலில் கவிழ்ந்த படகு..!! 61 பேர் பரிதாப மரணம்..!! நெஞ்சை பதறவைக்கும் துயரம்..!!

Read Next

“ஷ்ரேயா கோஷலையே மயக்கிய பெண்ணின் குரல்..!!” பியூர் ப்ளிஸ் என்று பதிவிட்ட ஸ்ரேயா கோஷல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular