தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக ஜொலித்து வருபவர் தான் தளபதி விஜய். இவர் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கினார். மேலும் இனி நேரடியாக அரசியல் களத்தில் செயல்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அந்த வகையில் தற்போது அவர் பகிர்ந்துள்ள வாழ்த்து பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியா கூட்டணி தலைவர்களால், எதிர்க்கட்சித் தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மதிப்பிற்குரிய ராகுல்காந்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள். நாட்டு மக்களுக்கு சேவை செய்ய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.