மனிதன் எங்கே போக விரும்புகிறானோ அங்கே தான் அவன் இருப்பிடம் என்றால் வான் பிரான் என்ற ஜெர்மன் நாட்டு விஞ்ஞானி. வான் பிரான் ஜெர்மனியில் இருந்து அமெரிக்கா வந்தவர் 20 ஆண்டுகளாக அமெரிக்கா வான்வெளி திட்டத்தை நிர்வகித்து வருகிறார். சந்திர மண்டலத்துக்கு முதல் மனிதனை அனுப்பி வைக்க காரணமாக இருந்தவர் இவர்..
நம் வாழ்வில் முடியாது என பல காரியங்களை சொல்லுகிறோம் நம் தர்க்கவாத புலனறிவை வைத்துக்கொண்டு முடியாது என முடிவு கட்டிவிட்டால் போகிற பாதையில் முகப்பேர் நாம் கதவை. இறுக்கி சாத்தி விடுகிறோம் முடியும் என்று எண்ணும்போது தானே வழி பிறக்கும். குறிக்கோள் அல்லது லட்சியம் என்பது நம் மனதில் சங்கிலி தொடர்பாக எண்ணங்களை ஏற்படுத்துகிறது லட்சியம் வலுபெற ஆக சக்தி செயலாக மாறுகிறது செய்ய விரும்புவதை வாழ்க்கையில் சாதிக்க முயல வேண்டும்..
நாம் ஆசை மட்டும் தான் படிக்கிறோம் ஆசை என்பது பறவை மீது போடும் கண்ணீர் போல் தண்ணீர் உள்ளே இயங்குவதில்லை ஆசை என்பது மேல் எழுந்த வாரியான நினைப்பு. ஒரு உருது பழமொழி உண்டு. ஆசைகள் குதிரைகள் ஆனால் பிச்சைக்காரர்கள் கூட சவாரி செய்வார்கள் என்று. வெறும் ஆசையினால் காரியம் நிறைவேறும் என்றால் சோம்பேறி பிச்சைக்காரர்கள் கூட ஆனந்தமாக குதிரையில் போவார்கள் என்கிறது பழமொழி..
லட்சியம் தீர்மானிக்கப்பட்டுவிட்டால் நாளடைவில் பாதி தெரியும் பாதையில் நடக்கும்போது லட்சியம் தீபமாக வழிகாட்டும். பெரிய சாதனைகளை சாதிக்க முடியாத போது ஏமாற்றம் ஏற்படுகிறது. ஒருமுறை தோற்றால் மனம் தளரக்கூடாது அடுத்த முறை வெற்றி அடைவேன் என்ற நம்பிக்கை வேண்டும் எளிதாக சாதிக்க கூடிய காரியங்களை கொடுத்து குழந்தைகள் உற்சாகமூட்டுங்கள் என்கிறார்கள் மன நூலார். சிறிய சாதனைகள் மனதில் ஒரு பழக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றன இந்த அனுபவம் பின்னால் பெரிய லட்சியங்கள் சாதனையாகுவதற்கு வழி காட்டுகிறது. என் மகளுக்கு ஒரு காரியம் உருப்படியாக செய்ய தெரியாது என்று திட்டும் தாய் குழந்தையின் மனதில் எத்தகையோர் எண்ணம் அமைய உருவாக்க காரணமாகிறார்கள். குழந்தைகள் தீர்மானங்களில் தவறு செய்யும் போது கரித்துக் கொட்டாமல் போனால் போகிறது அடுத்த முறை நன்றாக செய் என்றுதான் அவர்களிடம் கூற வேண்டும்.இளம் உள்ளங்கை ஊக்குவித்து உற்சாகப்படுத்த வேண்டும் மாறாக அவர்களை கேவலமாக்கி சிறுமைப்படுத்துவதன் மூலம் அவர்கள் எதிர்காலத்தையே பாழாக்குகிறோம்..
அதேபோல் தான் நம் மனமும் நம் சிறு சாதனைகளை பாராட்டுவதன் மூலம் நாம் வெகு தூரம் போகலாம் சிறு சாதனைகளில் ஏற்படும் வெற்றி லட்சிய தீபமாய் நமக்கு வழிகாட்டும்…!!