
தினசரி வாழ்க்கையில் காலையில் எழுந்தவுடன் பல் துலக்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அதுவும் குறிப்பாக ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டும் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் பலருக்கும் எப்படி முறையாக பல் துலக்குவது என்பது பற்றி தெரியாது. பல் துலக்கும் போது மேலும் கீழுமாய் தான் தேய்க்க வேண்டும். நீளவாக்கில் தேய்த்தால் பற்களில் தேய்மானம் ஆகிவிடும். எனவே மேலும் கீழுமாய் தான் பற்களை தேய்க்க வேண்டும். அதுமட்டுமின்றி பற்கள் ஈறுகள் மற்றும் நாக்கு என வாயின் அனைத்து பகுதிகளிலும் நாம் கவனத்தில் வைத்து சுத்தம் செய்வது தினசரி வாழ்க்கையில் அவசியமான ஒன்று. எவ்வளவு முறை பிரஷ் செய்கிறோம் எப்படி பிரஷ் செய்கிறோம் என்பதை பற்றி பார்த்தோம். தற்போது எத்தனை மாதங்களுக்கு ஒரு முறை பிரஷ்ஷை மாற்ற வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.
நம் தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தும் பிரஷ்ஷை இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயமாக மாற்றி விட வேண்டும். மற்றும் தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தும் பிரஷ் கடினமாக இல்லாதவாறு தேர்ந்தெடுத்து சாப்ட்டாக இருக்குமாறு பார்த்து வாங்க வேண்டும்.