எந்தெந்த நேரத்தில் பப்பாளி பழம் சாப்பிடலாம்..!! இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன..??
இந்த நவீன காலகட்டத்தில் உணவு முறைகளை பலரும் தனக்கு ஏற்றார் போல மாற்றி சத்தான உணவுகளை பின்பற்றாமல் அவரவர் சூழ்நிலைக்கு ஏற்றவாறு கிடைக்கும் உணவுகளை எல்லாம் சாப்பிடுகின்றனர். பலர் பழங்களை சாப்பிடுவதற்கு மறக்கின்றனர். ஒரு சிலர் நேரம் காலம் மாறியது உணவுகளையும் சரி பழங்களையும் சரி உண்ணுகின்றனர். இந்நிலையில் பழங்களை குறிப்பாக பப்பாளி பழத்தை எந்த நேரத்தில் உண்ண வேண்டும் மற்றும் அதன் நன்மைகள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
காலை உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு பப்பாளி பழத்தை சாப்பிடலாம். பப்பாளி பழம் சாப்பிடுவதால் உடலில் செயல் திறன் அதிகரிக்கும். செரிமானம் சீராக இருக்கும். இரவு உணவிற்கு ஒரு மணி நேரம் முன் சாப்பிடலாம். இரவு சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். நிம்மதியான தூக்கம் வர வழி வகுக்கும். அது மட்டும் இன்றி பப்பாளி பழம் உடலில் நீர் சத்தை தக்க வைக்க உதவுகிறது. மதிய உணவுடன் சேர்த்து சாப்பிடலாம். குறிப்பு பப்பாளி பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு.