நாம் அன்றாட வாழ்க்கையில் செய்திடும் சில தவறுகளால் தான் தலைவலி ஏற்படுகிறது. இதற்காக பல வலி நிவாரணிகள் சந்தையில் கிடைத்தாலும் அவையாவும் தற்காலிகமாகத்தான் தலைவலியை கட்டுப்படுத்துகிறது. அதிலும் இப்படி தொடர்ந்து வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்வதால் உடல் நலத்திற்கு பெரும் தீங்கு ஏற்படுகிறது.
இன்றைக்கு அனைத்து வயதினருக்கும் ஏற்படக்கூடிய சாதரணமானதாக தலைவலி மாறிவிட்டிருக்கிறது. தலைவலி மிகவும் கடினமானது, விரும்பத்தகாதது தான். இதனை சரியாக கையாண்டால், நம்முடைய வாழ்க்கை முறையினை மாற்றினால் தலைவலி வராமல் தடுக்க முடியும். இதைத் தவிர தலைவலி ஏற்ப்பட்டால் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளாது எப்படி அதனை சமாளிக்கலாம் என்றும் தெரிந்து கொள்ளுங்கள்.
கிராம்பு :
கிராம்புடன் சிறிதளவு உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.
அத்துடன் இரண்டு டீஸ்ப்பூன் பால் சேர்த்து அப்படியே அதனை விழுங்கி விடுங்கள். உப்பிற்கு தண்ணீரை உறிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கிறது. இதனை உட்கொள்வதால் தலையிலுள்ள அதிகப்படியான தண்ணீரை உறிந்து கொள்ளும். இதனால் அதீத தலைவலி குறைந்திடும்.
எலுமிச்சை :
பெரும்பாலும் வயிற்றில் வாயு உற்பத்தியாவதால் தான் தலைவலி ஏற்படுகின்றன. ஒரு டம்பள் சூடான நீரில் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் சட்டென தலைவலி குறைந்திடும். இக்கலவை வயிற்றில் வாயு உற்பத்தியாவதை தடுப்பதால் தலைவலிக்கு உடனடியாக நிவாரணம் கிடைத்திடும்.
யூக்கலிப்டஸ் தைலம் :
இதை அப்படியே நேரடியாகப் பயன்படுத்துவது சரியல்ல. அதனுடன் தண்ணீர், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் கலந்து நீர்த்துப்போகச் செய்த பின்னரே பயன்படுத்தவேண்டும். இந்த எண்ணெயை மருத்துவர் பரிந்துரையில்லாமல் குடிக்கக் கூடாது. கர்ப்பிணிகள், தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் இதைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.
பட்டை :
மசாலா பொருட்களில் ஒன்றான பட்டையில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. பட்டையுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இந்த கலவையை தலைக்கு பற்றுப் போல போட வேண்டும். நன்றாக காய்ந்ததும் கழுவி விடலாம்.
சாப்பாடு :
உங்களுக்கு அடிக்கடி தலைவலி ஏற்படுகிறது என்றால் சீஸ், சாக்லெட், ஆட்டுக்கறி போன்றவற்றை அடிக்கடி எடுத்துக் கொள்வதை தவிர்த்திடுங்கள். இதற்கு பதிலாக விட்டமின் சி, விட்டமின் டி, விட்டமின் பி 12,புரதம், கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஃபாஸ்ட் புட் மற்றும் அதிக காரம், மசாலா நிறைந்த உணவுகளை தவிர்த்திட வேண்டும்.
தேநீர் :
தலைவலி உடனடியாக குறைய ஒரு கப் அளவு தண்ணீரில் இஞ்சி, சீரகம்,மல்லி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள்.ஆறியதும் வடிக்கட்டி இந்த கலவையை குடிக்கலாம். இனிப்புச் சுவை வேண்டுமென்று நினைப்பவர்கள் ஒரு ஸ்பூன் தேன் கலந்து கொள்லுங்கள்
வெந்நீர்:
தலைவலியை குணமாக்க மிக எளிதான வீட்டு மருத்துவம் இது. ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு வெந்நீர் நிரம்பிய வாளியில் கால்களை நனைக்கும் அளவிற்கு வைத்திருக்க வேண்டும். இரவு தூங்கச் செல்வதற்கு முன்னால் பதினைந்து நிமிடங்கள் இதனைச் செய்தால் போதும். சைனஸ் பிரச்சனையால் தலை வலி ஏற்ப்பட்டிருந்தாலோ அல்லது நீண்ட நாட்களாக தலைவலி இருந்தாலோ இப்படிச் செய்வதானல் குணமாகும்.
இதனை தொடர்ந்து மூன்று வாரங்கள் வரை செய்து வர நல்ல பலன் கிடைத்திடும்.
தூக்கம்:
தலைவலி வருவதற்கு முக்கியமாண காரணங்களில் ஒன்று சரியான தூக்கம் இல்லாதது தான். ஆகவே, தலைவலியிலிருந்து முழு விடுதலை கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆழ்ந்த தூக்கத்திற்கு வழி வகை செய்ய வேண்டும். சராசரியாக குறைந்தது ஆறு மணி நேரம் வரை தூங்க வேண்டும்.
கண் பிரச்சனை :
கண்ணுக்கும் தலைவலிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. கண்ணுக்கு அதிகப்படியான அழுத்தம் கொடுக்கும் போது தலைவலி வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. கண்ணின் பார்வை குறைவு படும்போது கண் மருத்துவரை அணுகி கண்ணாடி போட்டுக் கொள்வது முக்கியமானது.
கண்ணுக்கு அதிக வேலை கொடுக்கும் பணியெனில் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை கண்ணுக்கு ஓய்வு கொடுங்கள். காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தினால் அதை அடிக்கடி சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
சுக்கு :
சுக்கை தோல் நீக்கி கொள்ளவும். தோல் நீக்கிய சுக்கை நன்றாக இடித்து 1 லிட்டர் தூய நீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். 5 நிமிடங்கள் கழித்து கற்பூரத்தை போட்டு 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். இந்த சுக்கு நீரை இளஞ்சூட்டில் தலை, முகம் ஆகியவற்றை தொடர்ந்து கழுவி வந்தால் தலைவலி குறையும்.
ஆவி பிடித்தல் :
ஆவிப்பிடிப்பது தலைவலியை குணப்படுத்தும். நெல்லிக்காயை சாறெடுத்து அதில் தேவையான அளவு உப்பு கலந்து கொள்ளுங்கள். இதனை நீங்கள் ஆவிப்பிடிக்கும் தண்ணீரில் ஒரு ஸ்பூன் கலந்து ஆவி பிடித்தால் நல்ல பலன் உண்டு.
பாதாம் :
பாதாமில் நிறைந்திருக்கும் மருத்துவ குணங்களால் அது உடல் நலத்திற்கு மட்டுமல்ல தீராத தலைவலியை தீர்க்கும் மருந்தாக அமைந்திடும். பாதாமில் அதிகப்படியான மக்னீசியம் இருக்கிறது. இது தலையில் ரத்த ஓட்டத்தை சீராக்கி தலைவலியை குறைத்திடும். இதைத் தவிர பாதாமில் இருக்கும் salicin வலி நிவாரணியாக செயல்படும்.
தண்ணீர் :
உடலுக்கு தேவையான தண்ணீர் கிடைக்கவில்லையென்றோல் உங்களுக்கு டீ ஹைட்ரேஷன் ஆகிவிட்டது என்பதன் அறிகுறியாக கூட இந்த தலைவலி ஏற்படும். மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜன் மற்றும் ரத்த அளவு குறைந்தாலும் தலைவலி குறைந்திடும்.
சோடா, குளிர்பானங்களை தவிர்த்து தண்ணீர், பழச்சாறு போன்றவற்றை குடிப்பதை அதிகப்படுத்துங்கள்.