
நாம் அன்றாட வாழ்க்கையில் அசதியாக உறங்கும்போது சிலருக்கு சில கனவுகள் வரும் அது நல்ல கனவாகவும் இருக்கலாம். கெட்ட கனவாகவும் இருக்கலாம். ஆனால், இந்த கனவு பலிக்குமா, பலிக்காதா என மனதில் குழப்பத்தில் நிறைந்து இருப்பார்கள். நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்தே விடியற்காலையில் வரும் கனவு கண்டிப்பாக நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த வகையில் எந்த நேரத்தில் கனவு கண்டால் அது அப்படியே நடக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
கனவு சாஸ்திரத்தின் படி, ஒரு கனவு குறிப்பிட்ட நேரத்தில் காணப்பட்டால், அது கட்டாயமாக நினைவாகும் என்று கூறப்படுகிறது. இந்த வகையில் கனவு காண்பதற்கு எது நல்ல நேரம் என்பது பலருடைய கேள்வியாக உள்ளது. கனவுகளில் இது எல்லாம் வந்தால் நமக்கு அதிர்ஷ்டம் உண்டாகும் என நம் பெரியோர்கள் கால கட்டத்தில் இருந்து கூறப்படுகிறது. குறிப்பாக கனவில் மழை தோன்றுவது அதிர்ஷ்டத்தின் வருகையாக பார்க்கப்படுகிறது. மேலும் பழங்கள் நிறைந்த மரத்தை உங்கள் கனவில் கண்டால் உங்களுக்கு பெரும் அதிர்ஷ்டம் உண்டாகும் என்று அர்த்தமாம். அதிர்ஷ்டத்தின் சின்னமான வெள்ளை சங்கு தென்பட்டால் நீங்கள் வாழ்வில் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை பெறப்போகிறார்கள் என்று அர்த்தமாம்.
இந்த வகையில் மதிய தூக்கத்தில் வரும் எந்த கனவுகளும் நடக்காது என்று கூறப்படுகிறது. குறிப்பாக நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை காணப்பட்ட கனவுகள் மட்டுமே நடக்க வாய்ப்புகள் அதிகம் என்று கனவு சாஸ்திரத்தின் படி கூறப்படுகிறது. எனவே அந்த நேரத்திற்குள் ஏதாவது நீங்கள் கனவு கண்டால் அது ஒரு வருடத்துக்குள் நிறைவேற வாய்ப்புள்ளது என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. கனவுகள் அப்படியே விரைவில் நடக்க சிறந்த நேரம் என்னவென்றால் அதிகாலை 3 மதியுங்கள் 5 மணி வரையிலான நேரம் பிரம்ம நேரம் எனக் கூறப்படுகிறது. இந்த நேரத்தில் நீங்கள் கனவு கண்டால் அது நடக்கும் வாய்ப்புகள் மிக மிக அதிகம். இந்த கனவு விரைவில் நடப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாம்.