
எந்த படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் கிடைக்கும்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!
இன்றைய நவீன காலகட்டத்தில் அனைவரும் பெட்டில் தான் படுத்து வருகிறோம். அது இல்லையென்றால் கீழே படுத்து உறங்க சொன்னால் பலரும் பயப்படுகிறார்கள். அந்த அளவுக்கு நாம் சொகுசாக மாறிவிட்டோம் என்பதே உண்மை. இந்நிலையில் நம் முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் பாயிலும் கயிற்றுக் கட்டிலிலும் தான் படுப்பார்கள். இன்றைக்கும் ஒரு சில வீடுகளிலும் கிராமப்புறங்களிலும் கயிற்று கட்டிலிலும் பாயிலும் படுத்து உறங்குகிறார்கள். இந்நிலையில் எந்த படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
கோரைப்பாயில் படுத்து உறங்கினால் உடல் சூடு மந்தம் மற்றும் உடலும் குளிர்ச்சி அடையும் உறக்கமும் நன்றாக வரும். பிரம்பு பாயில் படுத்து உறங்கினால் சீதபேதி சீதளத்தால் வரும் சுரம் நீங்கும். ஈச்சம்பாய் வாத நோய் குணமாகும். உடல் சூடு கபம் இவை எல்லாம் அதிகரிக்கும். மூங்கில் பாயில் படுத்து உறங்கினால் உடல் சூடும் பித்தமும் அதிகரிக்கும். தாளம் பாயில் படுத்து உறங்கினால் வாந்தி தலைசுற்றல் பித்தம் ஆகியவை நீங்கும். கம்பளி படுக்கையில் படுத்து உறங்கினால் குளிருக்கு இதமாக இருக்கும் குளிர் சுரம் நீங்கும். இலவம்பஞ்சு படுக்கையில் படுத்தால் உடலில் ரத்தம் தாது பலம் பெறும் தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும்.