எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு வாக்கு செல்கிறது..!! புகார் சொன்ன பெண்..!! நொடியில் அந்தரபல்டி..!!

இந்தியாவில் ஏழு கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டு மக்களவை பொது தேர்தல் இன்று நான்காவது கட்ட வாக்குப்பதிவை எட்டி உள்ளது.

காலை ஏழு மணி முதலாகவே விறுவிறுப்புடன் வாக்குப்பதிவுகள் நடைபெற்ற வருகின்றன. நான்காம் கட்ட வாக்குப்பதிவில் தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், பீகார், ஜம்மு, காஷ்மீர், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா. ஒடிசா ஆகிய 10 மாநிலங்களில் 93 தொகுதிகளில் வாக்குப்பதிவுகள் நடைபெற்று வருகின்றது,. ஆயிரத்திற்கும் அதிகமான வேட்பாளர்கள் மக்களின் வாக்குகளை எதிர்நோக்கி காத்துக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் கேரி கமர் ஜகான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த பெண்மணி ஒருவர் தான் சைக்கிள் சின்னத்தில் வாக்களித்ததாகவும் ஆனால் தாமரை மலருக்கு வாக்குகள் சென்றதாகவும் செய்தியாளர் சந்திப்பில் கூறினார், இதனால் அப்பகுதியில் சர்ச்சை ஏற்பட தேர்தல் அதிகாரிகள் தேர்தலை சரியாக நடத்துவதாக உறுதி செய்துள்ளனர் .அதனை தொடர்ந்து பெண்மணி இடம் காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறி சென்றார், இதனால் சிறிது நேரம் வாக்குச்சாவடியில் பதற்ற சூழ்நிலை ஏற்பட்டது.

Read Previous

சொத்து தகராறில் பயங்கரம்; 5 பேரை ஈவு இரக்கமின்றி கொன்று நாடகம்..!! பதறவைக்கும் தகவல் உள்ளே..!!

Read Next

பெற்றோர்களே உஷார் : குழந்தைக்கு எமனாக மாறிய கேரட்..!! துடிதுடித்து இறங்க சோகம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular