எந்த ராசிக்காரர்கள் எந்த ஆலயத்தில் வழிபட்டால் சிறப்பு..?? கண்டிப்பா அனைவரும் தெரிந்து கொண்டு பயன்பெறுங்கள்…!!
எந்த ராசிக்காரர்கள் எந்த ஆலயத்தில் வழிபட்டால் சிறப்பு என்று உங்களுக்கு தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..
மேஷம் ராசிக்காரர்கள் ராமேஸ்வரம் சென்று அங்குள்ள ஆலயத்தில் வழிபட்டால் மிகவும் சிறப்பாம்.
ரிஷபம் ராசிக்காரர்கள் திருப்பதி சென்று ஆலயத்தில் வழிபட்டால் நல்ல சிறப்பு என்று கூறப்படுகிறது.
மிதுன ராசிக்காரர்கள் பழனி சென்று வழிபட்டால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
கடகம் ராசி காரர்கள் ராமேஸ்வரம் சென்று அங்குள்ள ஆலயத்தில் வழிபட்டால் நல்ல பலனை பெற முடியும். சிம்மம் ராசிக்காரர்கள் ஸ்ரீவாஞ்சியம் ஆலயத்திற்கு சென்று வழிபட்டால் நல்ல பலனை பெறலாம்.
கன்னி ராசிக்காரர்கள் திருக்கழுக்குன்றம் ஆலயத்திற்கு சென்று வழிபட்டால் மிகவும் சிறப்பு.
துலாம் ராசிக்காரர்கள் திருத்தணி சென்று வழிபட்டால் மிகவும் சிறப்பு ஆக இருக்கும்.
விருச்சிகம் ராசிக்காரர்கள் காஞ்சிபுரம் சென்ற வழிபட்டால் நல்ல பலனை பெற முடியும்.
தனுசு ராசிக்காரர்கள் மயிலாடுதுறை சென்று அங்குள்ள ஆலயத்தில் வழிபட்டால் மிகவும் சிறப்பாம். அது மட்டும் இன்றி நல்ல பலனையும் நாம் பெற முடியும் என்று கூறப்படுகிறது.
மகரம் ராசிக்காரர்கள் சிதம்பரம் சென்று அங்குள்ள ஆலயத்தில் வழிபட்டால் நல்ல பலனை பெறலாம்.
கும்பம் ராசிக்காரர்கள் தேவிபட்டினம் சென்று அங்குள்ள ஆலயத்தில் வழிபட்டால் நல்ல பலனை பெற முடியும்.
மீனம் ராசிக்காரர்கள் வைத்தீஸ்வரன் கோவில் சென்று அங்குள்ள ஆலயத்தில் வழிபட்டால் நல்ல பலனை பெற முடியும்.




