👉எதிர்வினை.
மனைவி; என்னங்க உங்கம்மாவை முதியோா் இல்லத்தில் சோ்க்கப் போனீங்களே என்னாச்சு…?
கணவன்; “அதெல்லாம் சோ்த்தாச்சு”.
மனைவி ; “எங்கம்மா சொன்னது சாிதாங்க.
கணவா் ; “என்ன சொன்னாங்க”
மனைவி ; “நீங்க தங்கமானவங்களாம் ஆம்பளைனா உங்களை போல தான் இருக்கனும்பாங்க”.
கணவா்; “ஏனாம்.??
மனைவி; “மனைவி சொல்ல தட்டாம கேட்கிறீங்கனுதான்.”
கணவா்; ” சொல்ல மறந்துட்டேன். வயசான காலத்தில் பேச்சுத் துணைக்கு தொிந்தவா்கள் யாரும் இல்லாமல் அம்மா எப்படி இருப்பாங்கன்னு யோசனையா இருந்தேன்”
மனைவி ; “பேச்சு துணைக்கு ஆள் கிடைச்சுட்டாங்களா.?”
கணவா்; “கிடைச்சுட்டாங்க”.
மனைவி ; “அப்படியா யாரு..?”
கணவா் : “உங்கம்மா. இப்பத்தான் உன் அண்ணன் வந்து உங்கம்மாவை சோ்த்துட்டு போனான்”.
மனைவி : “என்னது..? பொண்டாட்டி பேச்சை கேட்டு பெத்த அம்மாவை அனாதை ஆஸ்ரமத்தில் சோ்த்துட்டானா? அவன் எல்லாம் ஒரு ஆம்பளையா.? அவன் உருப்புடுவானா.? பெத்த தாயிக்கு மூணுவேளை கஞ்சி ஊத்த அவனுக்கு வக்கில்லையா.? அப்படி என்னதான் அவன் பொண்டாட்டி தலையணை மந்திரம் ஓதினாளோ? பெத்த தாயை காப்பாத்த முடியாத அவனெல்லாம் வெளங்கவே மாட்டான்.
அவள் ஆவேசம் வந்தவளாய் ஆத்திரத்தை அடக்கமுடியாமல் ஓ’வென்று கத்தி கதறத் தொடங்கினாள். எந்த வினைக்கும் அதனை ஒத்த எதிா்வினை உண்டு. இதுதான் பிரபஞ்ச நியதி. இதில் எவரும் தப்பவே முடியாது.
அனைவருக்கும் பகிருங்கள்🙏🙏🙏