எனக்கு அந்த ஆசையெல்லாம் இல்லை.!! இதான் எதார்த்தம்..நடிகர் மம்மூட்டி ஓபன் டாக்..!!

மலையாள சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி. இவர் தமிழிலும் பல்வேறு வெற்றி படங்களில் நடித்து ரசிகர் கொண்டாடினர்.

71 வயதில் உடைய மம்முட்டி தற்பொழுது இளம் ஹீரோவுக்கு டப் கொடுக்கும் வகையில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வருகின்றார். வெவ்வேறு வித்தியாசமான கதாபாத்திரங்களில் இவர் நடித்து வெளிவந்த “கண்ணனூர் ஸ்கொயட்“, “காதல் – தி கோர்”, “ப்ரமயுகம்” போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது மேலும் அண்மையில் இவர் நடித்து வெளிவந்த “டர்போ ” திரைப்படம் வசூலை அள்ளியது .

இந்நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் நடிகர் மம்முட்டியிடம் வரும் காலத்தில் நீங்கள் எப்படி நினைவு கூறப்பட வேண்டும் என விரும்புகிறீர்கள்..?. என கேள்வி எழுப்பப்பட்டது அதற்காகு “இந்த உலகம் எத்தனையோ சிறந்த மனிதர்களை கண்டுள்ளது. அவர்களின் ஒரு சிலரை மட்டும் மக்கள் நினைவில் வைத்துக் கொள்வார். இந்த உலகம் எத்தனை காலம் என்னை நிலையில் வைத்துக் கொள்ளும் என்று நினைக்கிறீர்கள்.? பத்து வருடம் அல்லது 50 வருடம் நான் மக்கள் மனதில் இருப்பேனா திரை துறையில் ஆயிரக்கணக்கான நடிகர்கள் இருக்கின்றனர். அவர்களில் நானும் ஒருவன்.

உலகத்தை விட்டு சென்று விட்டால் ஒரு சில வருடங்கள் மட்டுமே நினைவில் வைத்துக்கொள்வார்கள். அதற்கு பின் எல்லாரும் காலத்தால் மறக்கடிக்கப்படுவார்கள். இதுதான் எதார்த்தம். காலத்திற்கும் இந்த உலகம் என்னை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை எல்லாம் எனக்கு கிடையாது” எனக் கூறி உள்ளார்

Read Previous

மாம்பழ சீசனில் சுவையான மாம்பழ கேசரி இப்படி செய்து பாருங்கள்.!!

Read Next

மேடையில் திடீரென நடிகர் பாலகிருஷ்ணா செய்த காரியம்.! பதறிபோன நடிகை அஞ்சலி.! !வைரல் வீடியோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular