“எனக்கு சிம்பு தான் ரொம்ப பிடிக்கும், அவருடன் இப்போதும் தொடர்பில் இருக்கிறேன்” ஜோதிகா ஓபன் டாக்..!!

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி முன்னணி நாயகனாக இருப்பவர் சிம்பு. “லிட்டில் சூப்பர் ஸ்டார்” என்று அழைக்கப்படும் இவர். 2006 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலை மாமணி விருதினை பெற்றுள்ளார்.

2005 ஆம் ஆண்டு போது ஆண்டு இவரது தந்தை இயக்கிய “காதல் அழிவதில்லை” படத்தில் ஹீரோவாக களம் இறங்கினார். தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் “எஸ் டி ஆர் 48” படத்தின் படப்பிடிப்புக்கு தயாராகிக் கொண்டிருக்கும் சிம்பு குறித்து “மன்மதன்” படத்தில் அவருடன் ஜோடியாக நடித்த நடிகை ஜோதிகா சில விஷயங்களை மனம் திறந்து பேசி உள்ளார்.

அவர் கூறியது “சிம்பு என்னை விட சின்ன பையன் தான். நான் நடித்ததிலேயே மிகவும் இளம் ஹீரோ என்றால் அது சிம்பு தான். அவர் ரொம்பவே வெளிப்படையான ஆள். அதனாலயே எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். இப்போது வரை நான் சிம்புவுடன் தொடர்பில் தான் உள்ளேன்”, என்று கூறியுள்ளார் நடிகை ஜோதிகா.

மேலும் அவர் ”சில்லுனு ஒரு காதல்” படத்தை பார்த்துவிட்டு சிம்பு மனம் திறந்து பாராட்டியதாகவும், அதன் பின் “செக்கச் சிவந்த வானம்” படத்தில் ஜோடியாக இல்லை என்றாலும் ஒரு சில காட்சிகளில் அவருடன் நடித்தது மறக்க முடியாத நினைவு என்றும் ஜோதிகா நெகிழ்ச்சியாய் கூறியுள்ளார்.

Read Previous

ஜவ்வரிசியில் உள்ள அசத்தல் நன்மைகள் தெரியுமா உங்களுக்கு?.. விபரம் இதோ..!!

Read Next

“செத்து செத்து விளையாடுவோமா டயலாக் புகழ் முத்துக்காளை” பெரிய படிப்பாளியாக மாறியதற்கு வடிவேலு தான் காரணமா.?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular