நடிகை நிவேதா தாமஸ்க்கு விரைவில் திருமணம் நடக்க போவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் சமீபத்தில் கலந்து கொண்ட திரைப்பட விழாவில் பேசிய போது எனக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கிறது என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை நிவேதா தாமஸ் கடந்த சில நாட்களுக்கு முன் லவ் எமோஜிகளை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததை அடுத்து அவர் காதலில் விழுந்துவிட்டார் என்றும் விரைவில் அவருக்கு திருமணம் நடைபெறும் என்றும் கூறப்பட்டது.
ஆனால் சமீபத்தில் அவர் ஒரு தெலுங்கு திரைப்பட டீஸர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோது அந்த பதிவு தான் நடித்துக் கொண்டிருக்கும் படத்திற்கான பதிவு என்றும் ஆனால் அதை பலர் தவறாக நினைத்து எனக்கு திருமணம் என்று வதந்திகளை கிளப்பி விட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
அந்த செய்திகளை பார்த்து எனது அம்மாவே ஆச்சரியப்பட்டார் என்றும் எனக்கே தெரியாமல் உனக்கு குழந்தைகள் இருக்கிறதா என்று என்னிடம் கிண்டலாக கேட்டதாகவும் அந்த விழாவில் அவர் கூறினார்.
மேலும் இந்த படத்தில் தான் எனக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் என்றும் எனது மகன்கள் பெயர் அருண் மற்றும் வருண் என்றும் கூறியதோடு, நிவேதா தாமஸ் அந்த படத்தில் தனக்கு கணவன், மகன்களாக நடித்தவர்களை அறிமுகம் செய்தார்.