கிரிக்கெட் வீரர்களின் பயோபிக் திரைப்படங்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதும் குறிப்பாக தோனி, டெண்டுல்கர் ஆகியோர்களின் பயோபிக் திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்தது.
அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜனின் பயோபிக் திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த சில மாதங்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் நடராஜன் பேட்டியளிக்கும் போது அந்த தகவலை உறுதி செய்தார்.
எனது பயோபிக் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க தயாராக இருக்கிறார் என்றும் எப்போது என்று மட்டும் சொல்லுங்கள் நான் உடனே வந்து நடித்து தருகிறேன் என்று அவர் எனக்கு வாக்குறுதி அளித்திருக்கிறார் என்றும் நடராஜன் கூறினார். மேலும் என்னுடைய சில பணிகளை எல்லாம் முடித்துவிட்டு பயோபிக் திரைப்பட பணியில் இறங்குவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் என்னுடைய திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பது மட்டுமின்றி அவரே தயாரிக்கிறார் என்றும் நடராஜன் கூறிய நிலையில் நடராஜன் பயோபிக் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பது மட்டுமின்றி தயாரிப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.