
கடலூர் மாவட்டத்தின் வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் பல ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களின் நடுவே வயல்வெளியில் கால்வாய் தோண்டும் பணிகள் என்எல்சி நிறுவனம் சார்பாக கடந்த 26-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தொழிலாளர்களின் கோரிக்கைகளை தற்போதைக்கு ஏற்க இயலாது என என்எல்சி தெரிவித்ததால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.