
ஆயில் புல்லிங் செய்வதால் என்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். ஆயில் புல்லிங் என்றால் வாயை எண்ணெய் ஊற்றி கொப்பளிப்பது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். வாய் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஒரு பாரம்பரிய தீர்வாக இருந்து வருகிறது. ஐந்து நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் வரை வாயில் எண்ணையை சுற்றி சுற்றி கொப்பளிப்பது இந்த முறையாகும்.
இது கெட்ட பாக்டீரியாக்களை குறைப்பதோடு வாய் துர்நாற்றத்தை தடுப்பதாக சொல்லப்படுகிறது. இதை செய்வதால் வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் அழிவதோடு நோய் எதிர்ப்பு சக்தியும் பலப்படுவதாக சொல்லப்படுகிறது.
20 நிமிடங்கள் வரை ஆயுள் புல்லிங் செய்த பின்னர் துப்பி விட வேண்டும். காலை எழுந்ததும் வாயில் எண்ணெய் ஊற்றி பத்து நிமிடங்கள் வரை கொப்பளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.