சாஸ்தாவுக்கு செய்யப்படும் அபிஷேக ஆராதனைகள் அளவற்ற பலன்களைக் கொடுக்க வல்லது. என்ன அபிஷேகங்கள் எதற்கு என்று தெரிந்து கொள்வோம்.
தைலாபிஷேகம்- வியாதிகளை நாசம் செய்யும்.திரவியப்பொடி, மஞ்சள்பொடி,அரிசிமா பொடி, நெல்லிப்பொடி போன்ற அபிஷேக பொடிகள்- கடன் நிவாரணத்தை அளிக்கும்.பஞ்சகவ்யம்-ஞானம் அருளும்.பஞ்சாமிர்தம்-ஆயுள் விருத்தியை அளிக்கும்.பசும்பால்-செல்வ வளத்தை அளிக்கும்.தயிர் அபிஷேகம்-தேக புஷ்டியையும் ஆரோக்கியத்தையும் அருளும்.நெய் அபிஷேகம்- நோயற்ற வாழ்வு தரும்.தேன் அபிஷேகம்- இனிய குரல் வளத்தையும் நல்ல வாழ்க்கை துணையையும் கொடுக்கும்.
கரும்பஞ்சாறு -வம்ச விருத்தி உண்டாகும்.பழச்சாறுகள்-தோற்றப்பொலிவைத் தரும்.இளநீர்-சத்புத்ர பேற்றையும் பெரும் வித்யையையும் அளிக்கும்.சந்தன அபிஷேகம்- தான்ய லாபத்தையும் தேக சௌக்கியத்தையும் அளிக்கும்.விபூதி அபிஷேகம்- ஐஸ்வர்யத்தையும் முக்தியையும் அளிக்கும்.
புஷ்போதக அபிஷேகம்-ராஜ பதவியை அளிக்கும். இதுபற்றி தெரிந்து அதன்படி தங்களின் வேண்டுதல் எதுவோ அதற்கு உண்டான அபிஷேகத்தை செய்து அருள் பெற்று நலம்பெற்று வாழுங்கள்.