என் அப்பாவின் நீண்ட நாள் கனவு நிறைவேறிருச்சு… ஸ்டார் பட இயக்குனர் இளன் நெகிழ்ச்சி பதிவு..!!

‘‘டாடா”  திரைப்படத்தின் வெற்றியினை தொடர்ந்து நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ஸ்டார்” இத்திரைப்படம் “பியார் பிரேம காதல்” படத்தை இயக்கியதன் மூலம் பிரபலம் அடைந்த இளன் இயக்கியுள்ளார்.

இளன் நடிகர் ராஜா ராணி பாண்டியனின் மகன். “ஸ்டார்” படத்தில் அதிதி சங்கர், ப்ரீத்தி முகுந்தன், லால், கீதா கைலாசம் ஆகியோர்  பல முக்கிய ரோலில் நடித்து உள்ளனர். மேலும் “ஸ்டார்” படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். எழிலரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பற்றி கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் திரைப்படத்தின் இயக்குனரான இளன் அவரது அப்பா குறித்து வெளியிட்டுள்ள பதிவு வைரல் ஆகி வருகிறது. அவர் வெளியிட்டுள்ள பதிவில் “ஸ்டார் திரைப்படத்தில் எனது அப்பா தோன்றியபோது அரங்கமே அதிர ஒலித்த கைதட்டலால் எனக்கு இன்றைய நாள் மிகவும் சிறப்பாய் அமைந்தது. எனது வாழ்வில் இது ஒரு சிறந்த தருணமாக இருக்கும். அவரது நீண்ட நாள் கனவு நிறைவேறிவிட்டது”, என மனம் நெகிழ குறிப்பிட்டுள்ளார்.

Read Previous

10,12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் சொன்ன குட் நியூஸ்..!!

Read Next

நீச்சல் உடையில் எல்லைமீறும் கவர்ச்சி..!! பாபநாசம் படத்தில் நடித்த பொண்ணா இது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular