என் உலகில் அவள் தான் பேரழகி..!! மிகவும் அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Oplus_131072

♥இளவட்டமெல்லாம்

அவளை வட்டமிட ,

விரட்டிப்பிடித்து

கரம் பிடித்தேன்

அவளை .

 

♥உச்சி தொடங்கி

பாதம் வரை

அவள் அழகை வருணித்து

நான் வடித்த கவிதை கண்டே

காதலித்தாள் என்னை

 

♥காதலும்,கவிதையும்

கலந்து ,வாழ தொடங்கி

ஆண்டு ஒன்றான பின் ,

ஆசையாய் அவளுக்கென ,

முன்பு

நான் வடித்த கவிதைகளை ,

படிக்க மறுக்கிறாள் .

கவிதை பக்கத்தில் மட்டுமே

மாறாத தன் அழகு,

நிஜத்தில் மாறிவிட்டதாய்

அழுத்துக் கொள்கிறாள்

ஆசையாய் அணைக்கும் பொழுதெல்லாம்.

 

‘♥தாயான பின்

இன்னும் நீ அழகடி’

பல முறை நான் சொன்னாலும்

பஞ்சனையில் பேசிடும் பொய்யென

பொய் கோவம் கொள்கிறாள்.

 

♥அன்று

மையை தவிர கருமை காணா

அவள் கண்கள் ,

இன்று

இரவு தூக்ககத்தை தொலைத்து

இருளாகி போனது.

அவை கூட

கருமேகம் சூழ்ந்த நிலாவென

நான் கவிதை பாட,

`கவிதைக்கு பொய்யழகு ‘என்கிறாள்

உண்மையை ஏற்காமல்

 

♥கொடி இடையென

வருணித்த இடை இன்று ,

வளைவு ,நெழிவின்றி

நேராய் இருப்பதாய்

கவலை கொள்கிறாள்

கண்ணாடி முன் நின்று,

கண்ணாடியும் பொய் சொல்வதாய்

கண் அடித்து நான் சிரிக்க ,

கண்ணை உருட்டி

முறைத்து செல்கிறாள்

முந்தி கொண்ட சிரிப்பை அடக்கி

 

♥கார் மேக குழாய் இருந்த

அவள் கூந்தல்

இன்று,

கரடு முரடாகி ,

பாதி காணாமல் போனதை காணுகையில்

ஏனோ பாவமாய் இருக்கிறது

 

♥அன்று

பாதத்தில் கூட

அழுக்கு படியாமல் இருப்பவள் ,

பால் படிந்த ஆடையை கூட

மாற்றாமல் சுழல்கிறாள்

பம்பரமாய்

இன்று

 

♥`இன்னும் அதே அளவு

பிடிக்கிறதா என்னை ‘

வினா எழுப்புகிறாள்

வீணான வினா என தெரிந்தும் .

காதல் நிறைந்த கண்ணால்

பார்க்கையில்

உன்னில் காணும் யாவும்

அழகுதான், என்றாலும்

கள்ளி அதை

நம்ப மறுக்கிறாள்

 

♥ஒரு நாள்

கை கோர்த்து அவளுடன்

நடக்கையில்

கண்ணெதிரே

பல கன்னிகள்

வந்தாலும்,

கண்டு கொள்ளாமல் நான் நடக்க,

கையை அழுத்திப் பிடித்து

கம்பீரமாய் அவள் நடந்தாள்.

பல முறை சொல்லியும்

நம்பாதவள்

இன்று

ஏற்றுக் கொண்டாள்

என் உலகில் அவள் தான் பேரழகி …..

 

Read Previous

மறுபிறவி.. இன்றைய சிறுகதை.. அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

உணவை வீணாக்காதீர்கள், தேவையில்லாத உணவுகளை வீனடிக்காமல் ஏழை எளிய மக்களுக்கு கொடுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular