“என் மூஞ்சி நல்லா இல்லன்னு கண்ணாடி கூட பாக்க மாட்டேன்” இயக்குனர் செல்வராகவனின் மனம் வருந்திய பேட்டி..!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் தமிழில் முதன் முதலில் தனுஷ் நடிப்பில் “துள்ளுவதோ இளமை” என்கின்ற திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகினார்.

முதல் படமே மிகப்பெரும் வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து தனுசுக்கும் இயக்குனர் செல்வராகவனுக்கும் திரை பயணத்தில் மிகப்பெரும் மைல்கல்லாக அமைந்தது.  திரைப்படத்திற்கு பின் பல ஹிட் திரைப்படங்களை இயக்கிய ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் இயக்குனர் செல்வராகவன். தனது இயக்கத்தால் தனக்கென்று தனி இடத்தை திரைத்துறையில் நிலைநாட்டியுள்ளார். இயக்குனராக மட்டுமன்றி நடிகராகவும் மக்கள் மனதில் இடம் பிடித்து வருகிறார் செல்வராகவன்.

சில வருடங்களாகவே இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றது. இவ்வாறு திரைத்துறையில் மட்டுமல்லாது சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருபவர் இயக்குனர் செல்வராகவன், தனது சமூக வலைதள பக்கத்தில் அடிக்கடி கருத்துகளை பதிவிட்டு எப்போதும் ஆக்டிவாக இயக்குனராகவும், நடிகராகவும் இருந்து வருகின்றார். இந்நிலையில் இயக்குனர் செல்வராகவும் சமீபத்தில் youtube சேனல் ஒன்றிற்குபேட்டி அளித்துள்ளார். செல்வராகவன் அதில் கூறி இருப்பது “நான் சின்ன வயதில் என் முகம் நல்லா இல்லை என்று கண்ணாடியில் கூட பார்க்க மாட்டேன். என் அம்மாவிடம் கூறினால் உனக்கு என்னப்பா நீ அழகாக தானே இருக்கிறாய் என்று கூறுவார். ஆனால் இப்போது ஒரு இயக்குனராக இருந்து நடிகனாக மாறியிருக்கும் நான் கண்ணாடியை தைரியமாக பார்க்கிறேன்”, என்று கூறியிருப்பது பலருக்கும் மகிழ்ச்சி அளித்து வருகிறது.

Read Previous

என்ன அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் தெரிந்து கொள்வோம்..!!

Read Next

இப்படி உடலுறவு வைத்தால், உங்களுக்கு இரண்டு மடங்கு திருப்தியை தரும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular