Oplus_131072
இந்த எலியாமணக்கு சாலையோரங்கள், தரிசு நிலங்கள்,பொட்டல் வெளிகள் ஆகியவற்றில் அதிகமாக காணப்படுகிறது. இது ஒரு தூய சித்த மருத்துவ மூலிகை. இதற்கு உரலாமணக்கு என்ற மாற்றுப்பெயரும்,மிளகாய்ப்பூண்டு, இரயில் பூண்டு போன்ற வட்டார வழக்கு பெயர்களும் உண்டு.
இது வயிற்றுகடுப்பு,சலதோசம்,இருமல்,நுரையீரல் தொற்று, ஈளைநோய்,மூச்சுகுழாய் அழற்சி, மஞ்சள் காமாலை, கல்லீரல் வீக்கம், வாதம்,வலிப்பு,தோல் நோய்கள்,ஸ்கர்வி,மலேரியா போன்ற நோய்களை குணப்படுத்த மரபுவழியாக பயன்படுகிறது.
1)இதன் இலையை அரைத்து காயம்,வெட்டுப்புண்,புண்,முதலியவைகளைக்கு பற்றுபோட நல்ல பலனுண்டு.
2)இதன் வேர் மற்றும் பட்டையை கைப்பிடியளவு எடுத்து கசாயம் வைத்து அருந்திவர பித்த நீரை சுரக்கச்செய்து அஜீரணக்கோளாறு, குன்மம் போன்றவற்றை குணப்படுத்தும்.மலத்தை இளக்கும்.
3)எலியாமணக்கு இலைகளை கீரையாக சமைத்து சோறுடன் பிசைந்து சாப்பிட்டால் பழைய மலத்தை இளகச்செய்யும்.மலச்சிக்கலைப் போக்கும்.
4)இதன் விதையை எடுத்து கசாயம் வைத்து தினம் இருவேளை அருந்திவர வாதவலி,வீக்கம்.கட்டிகள்,கல்லீரல் வீக்கம், பழைய மலச்சிக்கல்,வயிற்றில் நீர்கோர்ப்பு முதலியவற்றை குணப்படுத்தும்.
5)இதன் வேரை கொண்டு வந்து அதனுடன் மிளகு சேர்த்து இடித்து தேவையான நீர்விட்டு குடிநீர் செய்து அருந்திவர வாதம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
6)இலையை அரைத்து சொறி சிரங்கு போன்ற தோல் நோய்களுக்கு பற்றுபோட நல்ல பலன் கிடைக்கும்.
7)இதன் பாலை வெட்டுப்புண்,காயம் முதலியவற்றிற்கு விட்டுவர நல்ல பலனுண்டு.




