
இன்றைய சூழலில் பெரும்பாலுர் குடும்பத்தில் சண்டை அல்லது கடன் பிரச்சனை எலி மருந்து சாப்பிடுவதை பார்க்கப்படுகிறது, எலி மருந்து சாப்பிடுவதால் அவர்களின் உயிர் மற்றும் அவர்களின் உறுப்பு விரைவில் பாதிப்படைந்து செயல்படுவதை நிறுத்தி விடுகிறது இதனால் எலி மருந்து சாப்பிடுவோரை காப்பாற்றுவது மிகவும் கடினம்தான்..
எலி மருந்து சாப்பிட்ட ஒருவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்து வந்தால் அவருக்கு முதலுதவி அளித்து அவர் உயிரை காப்பாற்றுவதற்காக தகுந்த சிகிச்சைகள் வழங்கப்படும், மேலும் ஆரம்ப கட்டத்தில் gastric lavage முறையில் மூக்கில் வழியாக tube போட்டு வயிற்றை சுத்தம் செய்யப்படும், அடுத்த கட்டமாக கல்லீரல் செயலிழப்பை தடுப்பதற்கு plasma exchange செய்ய வேண்டும், கடைசி கட்டமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே உயிரை காப்பாற்ற முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றன..!!