
- பொதுவாக எடை அதிகரிப்பு இன்று பலரும் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சினையாகும் .இந்த எடை அதிகரிப்பதை குறைக்க பலரும் சில உணவு கட்டுபாடுகளை பின்பற்று கின்றனர்.
ஆனால் கட்டுப்பாடு தளர்ந்ததும் மீண்டும் எடை கூட ஆரம்பிக்கிறது .இந்த கட்டுப்பாட்டுடன் எப்படி எடை குறைக்கலாம் என்று இந்த பதிவில் காணலாம்
1.நாம் அன்றாடம் உட்கொள்ளும் மோர் மூலம் இந்த உடல் எடை பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.
2.மோரின் 3 வகையான ரெசிபிக்கள் மூலம் எடையை எளிதாகக் குறைக்கலாம். அந்த வகை மோர் பற்றி இங்கே காணலாம்.
3.எலுமிச்சை சாறு மூலம் மோர் தயாரிக்கலாம் .இது கொழுப்பை எரிக்க பெரிதும் உதவுகிறது. இந்த மோர் உங்கள் வயிற்றின் வளர்சிதை மாற்ற செயல்பாட்டை அதிகரிக்கிறது.
4.கலோரிகளை எரிக்கவும் இந்த மோர் உதவுகிறது. இந்த லெமன் மோர் தயாரிக்க, எலுமிச்சை மற்றும் கருப்பு உப்பை ஒன்றாக கலந்து மோரில் போட்டு, அதன் மேல் புதினா இலைகளை சேர்த்து, மோரை குடிக்கவும்.
5. சியா விதைகளில் மோர் தயாரிக்கலாம் .இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. அவை வயிற்றின் வளர்சிதை மாற்ற செயல்பாடுகளை துரிதப்படுத்தி வயிற்றில் ஈரப்பதம் மற்றும் ஜெல் போன்ற கலவையை உருவாக்குகிறது.
6.இந்த சியா விதை மோர் உடலில் இருந்து கொழுப்பை அகற்ற உதவுகிறது. இதை செய்ய மோரில் சியா விதைகளை சேர்க்கவும். அதன் பிறகு, இந்த மோரை உட்கொள்ளுங்கள்.
7. அடுத்து ஆளி விதையை வறுத்து அதன் பொடியை தயார் செய்து பின் மோரில் கலந்து குடிக்கவும்.
8.இந்த ஆளி விதை மோர் உடலில் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துவதோடு, கொழுப்பை ஜீரணிக்கவும் இது உதவுகிறது.
9.மோரில் சேர்க்கப்படும் ஆளி விதையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது உடலில் தேங்கி இருக்கும் கொழுப்பை எரிக்கிறது.