
எலும்புகளை பலப்படுத்தும் சீதாப்பழத்தில் உள்ள நன்மைகள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!
இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்ற வேண்டும் என்று பலரும் பல விதங்களில் அறிவுரை கூறி வருகிறார்கள். அதுவும் ஆரோக்கியமான உணவுகள் என்றால் ஆரோக்கியமான காய்கறிகள் மட்டுமல்ல ஆரோக்கியமான பழங்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும். பழங்கள் என்றாலே ஆரோக்கியம் தான். இந்நிலையில் சீதாப்பழத்தில் ஒளிந்துள்ள ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி தற்போது பார்க்கலாம்.
சீதாப்பழம் எலும்புகளை பலப்படுத்த மிகவும் உதவுகிறது. சீதாப்பழத்தில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளதால் எலும்புகளை வலுப்படுத்த மிகவும் உதவுகிறது. இதில் உள்ள சத்துக்கள் மூட்டு வீக்கத்தை போக்குகிறது. அதுமட்டுமின்றி இது குளிர்காலத்தில் ஏற்படும் எலும்பு வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. ஆப்பிள் மாதுளை என தினசரி வாழ்க்கையில் அனைவரும் இந்த பழங்களை எல்லாம் சாப்பிடவும் ஆனால் சீதாப்பழத்தை சாப்பிடுவதற்கு சற்று தயங்கியே இருப்போம் கண்டிப்பாக சீதாப்பழத்தை உங்களது உணவு பழக்க வழக்கத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் இதில் உள்ள கால்சியம் மாற்றம் மெக்னீசியம் பல நோய்களை குணப்படுத்த உதவுகிறது.