
ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் அதனை எவ்வாறு தயாரிப்பது என்றும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்….
ஆட்டுக்காலில் கால்சியம் பாஸ்பரஸ் மெக்னீசியம் சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் எலும்பு மச்சையில் இரும்பு சிங் செலினியம் வைட்டமின் பி மற்றும் இ ஒமேகா-3 மற்றும் 6 ஆகியவையும் காணப்படுகிறது. அதன்படி ஆட்டுக்காலை தண்ணீரில் கொதிக்க வைக்கும் போது அதில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் தண்ணீரில் கலக்கும் இதில் மிளகு வெங்காயம், தக்காளி மற்றும் பூண்டு போன்ற பொருட்களை சேர்த்து கொதிக்க வைக்கும் போது அதில் இருக்கக்கூடிய சத்தும் நமக்கு கிடைக்கிறது. அந்த தண்ணீரை வடிகட்டி குடிக்கும் போது அவை எளிதாக செரிமானமாகும் என்று தெரிய வருகிறது ஆட்டுக்காலை எவ்வளவு நேரம் கொதிக்க வைக்கிறோமோ அந்த அளவிற்கு சத்துக்கள் அதிகப்படியாக கிடைக்கும் இதனால் சூப் தயாரிக்கும் போது குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் கொதிக்க வைக்கலாம் என்று தெரிய வருகிறது. சிலர் சுமார் நான்கு அல்லது ஐந்து மணி நேரம் கொதிக்க வைத்து குடிக்கும் வழக்கத்தை கடைபிடிப்பார்கள் அந்த முறையும் நல்லது தான் இந்த ஆட்டுக்கால் சூப்பு குடிப்பதால் நம் எலும்புகள் மற்றும் மூட்டு பகுதி வலிமையாகும் இதில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் எழும்பின் உறுதி தன்மைக்கு தேவையானவை. இந்த ஆட்டுக்கால் சூப்பு குடிப்பதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனை வராது இது செரிமான மண்டலத்தின் பணியை எளிதாக்குகிறது. அந்த வகையில் எலும்பு மட்டுமின்றி குடல் ஆரோக்கியத்திலும் ஆட்டுக்கால் சூப் பெரும் பங்கு வகிக்கிறது இதேபோல் இதில் இருக்கும் சத்துக்கள் நம் உடலுக்குள் சென்ற உடன் கிளைசிங் என்ற வேதிப்பொருளாக மாறும் இவை நரம்பு மண்டலத்தை நிதானப்படுத்தி சீரான தூக்கத்தை வழங்குகிறது..!!