எல்லாம் முடிஞ்சிடுச்சு..!! இனி இழக்க எதுவுமே இல்லைன்னு நினைக்கிறீர்களா?.. உங்களுக்கான பதிவு..!!

எல்லாம் முடிஞ்சிடுச்சு…
இனி இழக்க எதுவுமே இல்லைன்னு நினைக்கிறீர்களா?

முடிவுவென்று ஒன்று நிரந்தரமாக இல்லவே இல்ல…

ஒரு முடிவில், இன்னொரு அழகான ஆரம்பம் தொடங்கும்…

ஒரு விஷயம் உங்களை விட்டு போயிடுச்சுனா, அதோட எல்லாம் முடிஞ்சிடுச்சுனு அர்த்தம் இல்லை…

உங்களோட தங்க விதிக்கபடாத ஒன்று தான், உங்களை விட்டு இப்ப போயிருக்கு…

உங்களுக்கேயான…
உங்களோடு நிரந்தரமா பயணிக்கற ஒன்று, இனி உங்களுக்காக வந்தே தீரும்…

அது ஒரு அழகான தனிமையாக கூட இருக்கலாம், அல்லது சிறு நாய்க் குட்டியாக கூட இருக்கலாம்…

இப்படியே ஏதோ ஒன்று,
உங்களுக்கான ஒன்று,
உங்களை வந்து அடைந்தே தீரும்…

இழந்தவை எல்லாம் உங்களுக்கு பாடங்களே… எது உங்களுக்கானது என்று காட்டி கொடுக்க வந்த அனுபவங்களே… அந்த அனுபவ பாடங்களை கற்று,
அத்தனையையும் கடந்து வாங்க…

வாசலுக்கு வெளியே,
வசந்தத்தை சுமந்து, உங்கள் வாழ்க்கை உங்களுக்காக காத்துகிட்டிருக்கு.

Read Previous

பல இந்துக்கள் கூட அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்..!! தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

வயிற்றிலுள்ள ஏகப்பட்ட பிரச்சினைகளுக்கு மருந்தாகும் பேரிக்காய்..!! தினமும் சாப்பிடலாமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular