Oplus_131072
#எல்லா_பிரச்சனைகளும் உங்களுக்கு_சொல்வது !! ஒன்றே_ஒன்று_தான் ..
அது
உன்னை நீயே திருத்தி , மேன்படுத்திக்கொள் என்பதை மட்டுமே ..
இது இப்படித்தான் !! அது அப்படி தான் ?? என்று ஓர் வரைமுறையை வகித்து கொண்டு ..
அப்படியே வாழ நம் வரவில்லை ..
நாமும் கற்று ,
நம்மை மேன்படுத்தி ,
நமது எல்லைகளை விரிவுபடுத்தி ,
நமது அணுகுமுறைகளை மாற்றி ,
நமது தவறுகளை நாமே உணர்ந்து ,
நம்மை நாமே மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதே ..
எல்லா பிரச்சனைகளுக்கும் நமக்கு சொல்லிக்கொடுத்துக்கொண்டே இருக்கு ..
நம் பிரச்சனைக்கு யாரோ ?? ஏதோ ?? காரணம் என்று சுட்டிக்காட்டும் வரையில் ..
நமது பிரச்சனைகள் என்பது வாழ்வின் ஓர் அங்கமாகவே மாறிவிடும் என்பதே எதார்த்தம் ஆகும் ..
நம்மை நாமே உணர்ந்து !!
நமது தவறுகளை நாமே உணர்ந்து !!
நாமே அதை உருவாக்கவும் , வளரவும் , இப்போதும் அது நம்மோடு இருக்க , நாமே காரணம் என்று உணர்ந்து ..
நம்மை மாற்றிக்கொள்ளும்போது தான் ..
அந்த பிரச்சனை ஓர் நிரந்திர முடிவுக்கு வரும் ..
அதுவரை
தற்காலிக சமாளிப்புகளும் ,
சிறிது காலம் ஒத்திப்போடுவதும் தான் தொடரும் ..
நிரந்திர தீர்வு என்பது ..
உங்களை நீங்களே மாற்றி ..
அதை நடைமுறைப்படுத்தி , செல்படுத்தினால் மட்டுமே விடுவிப்பு சித்திக்கும் ..
இறைவனும் அதையே உணர்வித்து அருள்கிறான் ..
அதை உணராதே ..
சுற்றத்தையே குறை குறி !!
இறைவனையும் குறை கூறி !!
ஓர் பயனும் இல்லை என்பதே மெய்யாகும் ..




