எல்லா மகன்களும் தன் பெற்றோர்களை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர வைக்கும் பதிவு..!!!

வயதான அப்பாவை கூட்டி கொண்டு அவரின் மகன் ஒரு உயர் தர உணவகத்திற்கு கூட்டி சென்றார். நிறைய கூட்டம் இருந்தது. உணவு வந்ததும் அப்பா சாப்பிட ஆரம்பித்தார். வயதின் முதுமை காரணமாக ஸ்பூனில் எடுத்து சாப்பிடும் போது உணவுகள் கீழே சிதறியது, உடைகள் மேல் கொட்டியது, சிறிய சிறுவன் போல் சாப்பிட்டு முடித்தார்.

சுற்றி இருந்தவர்கள் அவர் சாப்பிடுவதை பார்த்து சிரிக்க ! அவர் மகனோ பொறுமையுடன் அவர் கை வாயை துடைத்து விட்டு அவரை கைத்தாங்கலாக கூட்டி சென்று வாஷ் பேசினில் கை, வாய் கழுவி விட்டு துடைத்து கூட்டி வந்து அமர வைத்து, பில் செட்டில் செய்து விட்டு வெளியே கூட்டி சென்றார்.

இதை எல்லாம் பார்த்து கொண்டிருந்த அந்த உணவகத்தின் உரிமையாளர் மகனிடம் வந்து தன்னை அறிமுகம் செய்து கொண்டு ” நீங்கள் இந்த உணவகத்தில் ஏதாவது விட்டு விட்டு செல்கிறீர்களா என்று கேட்க அதற்கு மகன் எல்லாம் சரியாக தான் இருக்கு ஒன்றும் இல்லை என்று சொல்ல!

உரிமையாளர் சொன்னார் இல்லை சார் நீங்கள் இந்த உணவகத்திற்கு வரும் எல்லா மகன்களுக்கும் தன் பெற்றோர்களை எப்படி பார்த்து கொள்ள வேண்டும் என்று ஒரு நல்ல பாடத்தை கொடுத்து விட்டு செல்கிறீர்கள் என்றார்.

நம் பெற்றோர்கள் நாம் குழந்தைகளாக இருந்த போது செய்த தியாகத்திற்கு அளவே இல்லை, அவர்கள் வயதாகி குழந்தையான பின் நாம் அவர்களை நன்கு பார்த்து கொள்ள வேண்டும்.

Read Previous

என்னதான் அதிகமாக படித்திருந்தாலும் பணிவு என்பது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்று என்பதற்கு இந்த கதை நல்ல உதாரணம்..!!!

Read Next

மனைவி என்பவள் யார்..?? ஒவ்வொரு கணவனும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று..!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular