எல்லோருக்கும் விடுமுறையாம் அம்மாக்களுக்கு விடுமுறையே கிடையாது..!! படித்ததில் பிடித்தது..!!

Oplus_16908288

இன்று தீபாவளி பண்டிகையாம் எல்லா கம்பெனிக்கும் விடுமுறையாம்..

 

அம்மாக்களின் கம்பெனிகளுக்கு விடுமுறையே கிடையாது.

 

காலையில 4 மணிக்கு எந்திரிச்சு உளுந்த வடையும், முறுக்கும் ,அதிரசமும் போட்டேன்…

 

என்னுடைய பிள்ளைகள் எல்லாம் எண்ணெய் தேய்த்து குளித்து புதுத்தாடை உடுத்தி பலகாரம் சாப்பிட்டார்கள்..

 

எனக்கு பாத்திரம் சேர்ந்துவிட்டது அந்த பாத்திரங்களை நான் கழுவி வைத்தேன்.

என் கணவர் கையில் கறியுடன் வந்துவிட்டார் இந்தா சமைத்து வை என்றார்..

 

சிக்கன் கிரேவியும் சிக்கன் குழம்பும் சோறும் வடித்தேன் என் பிள்ளைகளும் என் கணவரும் சாப்பிட்டார்கள் நான் வடையை மட்டும் சாப்பிட்டேன்.

 

அவர்கள் சாப்பிட்ட பாத்திரத்தை எல்லாம் கழுவி வைத்தேன்..

 

அதிகாலை நாலு மணிக்கு எந்திரிச்சது தூக்கம் சொக்கியது கொஞ்ச நேரம் கண்

அசந்தேன்.. மூத்த மகன் #அம்மா காப்பி போடு என்று வந்து விட்டான்..

அவர்களுக்கு காபி போட்டு கொடுத்தேன்.

அவர்கள் காப்பி குடித்தார்கள்

நான் தலையில் லேசாக எண்ணெய் வைத்து குளித்துவிட்டு

புதிதாக வாங்கிய நைட்டியை போட்டுக் கொண்டு மதிய உணவு சாப்பிட்டேன்.

மணி ஐந்து.

 

பக்கத்து தெருவில் அம்மா வீடு அவர்களுக்கு நான் சுட்ட பழகாரத்தை கொண்டு போய் கொடுத்தேன்… திரும்பி வீட்டுக்கு வரும்போது மணி 7::30

காப்பி குடித்த பாத்திரங்களை எல்லாம் கழுவி விட்டு இரவு உணவுக்கு தயாரானேன் தோசை சுடுவதற்கு…

 

எல்லோருக்கும் விடுமுறையாம் அம்மாக்களுக்கு விடுமுறையே கிடையாது……

Read Previous

படித்து சிந்தித்து பாருங்கள்..!! விருந்தும் மருந்தும் மூன்று நாள்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

பண்புள்ள மனிதர்கள் என்றால் அடுத்தவரைப் பற்றியும் யோசிக்கும் மனிதர்கள் தானே..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular