எல்.கே.ஜி சிறுமிக்கு பாலியல் தொல்லை..!! 52 வயது கணித ஆசிரியர் கைது.!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வாடியான் தெரு பகுதியில் வசித்து வருபவர் பெரியசாமி (வயது 52) விருதுநகர்- சிவகாசி சாலையில் செயல்பட்டு வருகின்ற தனியார் மெட்ரிக் பள்ளியில் கணித ஆசிரியராய் பணிபுரிந்து வருகின்றார்.

இந்த பள்ளியில் நான்கு வயது உடைய சிறுமி யுகேஜி பயன்று வருகிறார். இந்நிலையில் சிறுமிக்கு கணித ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி தனது பாட்டியிடம் இது குறித்து தெரிவித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து சிறுமி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த ஆசிரியர் மீது புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் ஆசிரியர்  பெரியசாமி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ள காவல் துறையினர் ஆசிரியரை கைது செய்து தீவிர  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Previous

திமுக கொடிக்கம்பம் நடமுயன்ற 21 வயது இளைஞர் மின்சாரம் தாக்கி பலி..!! சென்னையில் சோகம்..!!

Read Next

பரபரப்பு.. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கூட்டுறவு செயலர்..!! நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular