எழும்பூரில் ரயில் மோதி முதியவர் உயிரிழப்பு…!!

ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெரியவருக்கு விபத்து நேர்ந்தது…

சென்னையில் பரபரப்பாக இயங்கி வரும் எழும்பூர் ரயில் நிலையத்தை ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர், இந்த நிலையில் எழும்பூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் அடிபட்டு முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார், கால் துண்டான நிலையில் சடலத்தை கைப்பற்றிய போலீசார் முதியவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர், ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடந்ததே விபத்துக்கான காரணம் என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது, மேலும் முதியவரின் தகவல்களை சேமித்து எலும்பூர் காவல் நிலையம் முதியவரின் உறவினர்களுக்கு தகவல் தந்துள்ளது, இதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது எழும்பூர் காவல் நிலைய அதிகாரிகள்..!!

Read Previous

விருதுநகர் மண் பெருந்தலைவர் காமராஜரை நமக்கு வழங்கியது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் புகழாரம்..!!

Read Next

படித்ததில் பிடித்தது: வீட்டுக்கு வந்த மருமகள பொண்ணா மதிச்சா போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular