
உளுந்தூர்பேட்டை அடுத்த எஸ். புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி மாணவர்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ரோட்டரி சங்க துணை கவர்னர் அன்பழகன் தலைமை தாங்கினார். முன்னாள் துணை கவர்னர் திலீப் ரோட்டரி சங்கச் செயலாளர் பாபு முன்னிலை வகித்தனர். முன்னாள் தலைவர்கள் ஜெய்சிங், சுப்பிரமணியன், மோகன்ராஜ், தெய்வீகன் முன்னாள் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்